Tuesday, December 21, 2021

திராவிட ரத்தம்.

 *சௌதி அரேபிய ஷேக் ஒருவர் இதயமாற்று அறுவைச் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.*

*அவரது ரத்தம் அரிதான ஒரு வகை ரத்தம். அதே வகை ரத்தம் கொடுக்க இந்தியாவில் ஆள் கிடைக்குமா என்று தேடினார்கள்.*
*கிடைத்தார் ஒரு சென்னைக்காரர். அவர் சௌதி அரேபிய ஷேக்குக்கு ரத்தம் கொடுக்க முன் வந்தார். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது.*
*அகமகிழ்ந்து போன சௌதி அரேபிய ஷேக், அந்த சென்னைகாரருக்கு ஒரு டொயோட்டா பிராடோ கார், லாபிஸ் லேசுலாய் பதித்த நகைகள், வைரங்கள், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் இவற்றைப் பரிசளித்தார்.*
*சென்னைக்காரர் செம ஜாலியாகி விட்டார்.*
*சில ஆண்டுகள் கழித்து அதே சௌதி அரேபிய ஷேக்குக்கு, மும்பையில் மீண்டும் வேறு ஒரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அந்த சென்னைக்காரருக்கு மீண்டும் அழைப்பு போனது. அவர், ரத்தம் கொடுக்க ஓடோடி வந்தார்.*
*ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தபோது அந்த சென்னைக்காரருக்கு ஷேக், நன்றி கூறி, ஒரு வாழ்த்து அட்டையையும், ஒரு பையில் கொஞ்சம் பேரீச்சம் பழத்தையும் போட்டு பரிசாக கொடுத்தார்.*
*சென்னைக்காரர் அதிர்ச்சியாகி விட்டார்.*
*"என்ன ஷேக் இது? போன தடவை சும்மா அள்ளிக் குடுத்தீங்க. இந்தமுறை கிள்ளிக்கூட கொடுக்காம இப்படி ஏமாத்துறீங்களே?" என்று கேட்டார்.*
*அதற்கு ஷேக் சொன்னார். ‘என்ன பண்றது? இப்ப என் உடம்பில ஓடுறது உன்னோட திராவிட ரத்தம். அடுத்தவங்கள எப்படி ஏமாத்தலாம்ன்னு மட்டும்தான் யோசிக்கத் தோணுது. அதனால எதையும் எடுத்துக் குடுக்க மனசே வர மாட்டேங்குது ராசா’.*
😁😁

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...