1978 தலைவர் முதல்வர்...அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வு பெறும் வயதை 55 இல் இருந்து 58 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பற்றி சட்டமன்றத்தில் விவாதம் வைக்கப்பட.
எதிர்க்கட்சி தலைவர் தீயசக்தி எழுந்து நான் அவர்கள் ஓய்வு பெறும் வயதை 58 உயர்த்த அனைத்து வழிமுறைகள் செய்து கோப்புகள் தயார் செய்யப்பட்டு நான் அதில் கையொப்பம் இடுவதற்குள் நெருக்கடி நிலை நாட்டில் அமுல் ஆகி..
அவசரகால நிலை மூலம் ஜனாதிபதி ஆட்சி வந்து விட்டதால் அந்த கோரிக்கை நிறைவேறாமல் போய்விட்டது என்று பேச...அன்று அரசு ஊழியர்கள் பலர் சை..
இவர் ஆட்சி நீடித்து இருந்தால் நம் கோரிக்கை நிறைவேறி இருக்கும் போல என்று எண்ணும் வண்ணம் பேசினார்.
தலைவரும் பதில் சொல்லாமல் அமைதி ஆக இருந்தார்...திமுக உறுப்பினர் கோஷம் போட அதிமுக உறுப்பினர்கள் பதில் கோஷம் போட தலைவர் அமைதியாக சிரிப்பு ஒன்றையே பதிலாக தந்தார்.
மறுநாள் சட்டமன்றம் கூடிய உடன் முதல்வர் எம்ஜியார் சபாநாயகர் மூலம் ஒரு கோப்பில் இருந்த விஷயங்களை படிக்க சொல்ல.
அந்த கோப்பில் முதல்வர் ஆக இருந்த தீயசக்தி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பை இப்போது உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று குறித்து அதில் கையொப்பம் இட்டு இருந்ததை அவையில் படித்து காட்ட தீயசக்தி முகம் பேய் அறைந்தது போல மாறியது.
முதல் நாள் சட்டமன்றத்தில் தீயசக்தி பேசியவுடன் அவர் பேசியதை நம்பாமல் அன்று இரவு அரசு கோப்பை வரவழைத்து பார்க்கும் போது இந்த புளுகு சங்கதி தெரிந்தது.
நான் யாரையும் எப்போதும் சரியா அளந்து எடுப்பேன் என்று தலைவர் சொன்னது அன்று மெய் ஆனது.
No comments:
Post a Comment