பிசினஸ் குறித்தான ஆலோசனைக்காக நம்மை அணுகும் பலரும் அவர்களது வியாபார தேக்க நிலைக்கு ஒரே காரணமாக இன்று கை காட்டுவதில் கோவிட்டுக்கே முதலிடம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
கோவிட்டுக்கு பிறகு பெரும்பாலான தொழில்கள் மற்றும் வியாபாரங்கள் முடங்கியிருப்பதை நாம் ஒப்புக் கொண்டாலும் இதே பேரிடர் காலத்தில் அமேசான் போன்ற சில நிறுவனங்கள் மட்டும் எப்படி முன்னை விட மூன்று மடங்கு லாபத்துடன் பெரும் வெற்றி பெற முடிந்தது என்று ஆராய்கையில் அவர்களது தெளிவான பிசினஸ் ப்ளானே அதற்கு காரணம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
எனவே கோவிட் காலத்திலும் மூன்று வேளை சாப்பிட்டு தீபாவளி பொங்கல்னு புத்தாடையுடன் கொண்டாடி அண்ணாத்த மற்றும் மாநாடு ரிலீஸ் ஆனதும் முதல் நாள் முதல் ஷோ பார்த்து ரிவ்யூ எழுதும் ஆட்கள்தான் நாம்...புதிய முயற்சிகள் எடுக்க தயங்கும் உங்கள் மனநிலைக்கு சௌகரியமாக கோவிட்டை கை காட்டிக் கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டு அதன் மூலம் தற்காலிக திருப்தியடைகிறீர்கள் என்ற நிதர்சனத்தை முதலில் உங்களுக்கு நீங்களேவாவது ஒப்புக் கொள்ள முயலுங்கள். புறக்காரணிகளை கைகாட்டிக் கொண்டிருப்பது நீண்ட கால வியாபார வளர்ச்சிக்கு நிச்சயம் உதவாது என்பதையும் உணருங்கள்.
உலகம் அதன் இயல்பில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.மக்கள் அவர்களுக்கு தேவையானதை இந்த பேரிடர் காலத்திலும் வாங்கிக் குவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
இங்கு நீங்கள் ஆராய வேண்டியது அவர்கள் ஏன் உங்கள் பொருளையோ அல்லது சேவையையோ தேர்ந்தெடுக்கவில்லை என்பதை மட்டுமே!
No comments:
Post a Comment