"தமிழ்த் தாய் வாழ்த்து" - என்பது 'மாநில அரசின் பாடல்'- என்றும் - "அது இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்"- என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது!
முதலில் மாநில அரசின் பாடல் - "State Anthem"- என்று ஒன்று இருப்பதற்கு அரசியல் சட்டப்படி இடம் உள்ளதா? அப்படி ஒவ்வொரு மாநிலமும் தனக்கென்று ஒரு 'மாநில அரசுப் பாடல்' வைத்துக் கொள்ள அரசியல் சட்டம் வழிவகுக்கிறதா என்று தெரியவில்லை!
நமக்குத் தெரிந்து - NATIONAL ANTHEM - எனப்படும் 'தேசீய கீதம்' தான் அரசியல் சட்டபூர்வமான அந்தஸ்து பெற்றுள்ள பாடல்!
'தமிழ்த் தாய் வாழ்த்து' - என்பது தமிழ் மொழியைத் தாயாகக் கருதி வாழ்த்திப் பாடப் படும் பாடல்! அந்த அர்த்தத்தில்தான் அதன் வரிகளும் உரிய மாற்றங்களுடன் - மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை எழுதிய மூல வடிவத்தில் இருந்து மாற்றப்பட்டு - கருணாநிதி ஆட்சியில் அமைக்கப் பட்டன!
தேசிய கீதம் எனப்படும் - "ஜன கண மன"- இந்த பாரத தேசத்தின் பல்வேறு பிரதேசங்களை - நிலப் பரப்புக்களைப் போற்றும் பாடலாக உள்ளது.
"பஞ்சாப - ஸிந்து - குஜராத - மராட்டா - த்ராவிட - உத்கல - வங்கா"- இப்படி இந்த பாரத தேசத்தின் பல்வேறு நிலப்பகுதிகள் குறிப்பிடப் படுகின்றன.
எனவே அது 'தேசிய கீதம்'!
ஆனால் 'தமிழ்த்தாய் வாழ்த்து' என்பது குறிப்பிட்ட மொழியை மட்டுமே தாயாகக் கருதிப் பாடப்படும் மொழி வாழ்த்துப் பாடல்!
தமிழகத்தில் கணிசமான மக்கள் தொகை தெலுங்கர்கள் - நாயுடு, ரெட்டியார்- ஆயிர வைஸ்யாள் போன்றவர்கள்...
கன்னடம் பேசும் தேவாங்கச் செட்டியார், நாயக்கர் போன்றவர்கள்...
மற்றும் மலையாளிகள் உட்பட இருக்கிறார்கள்.
ஒரு மொழியை வாழ்த்திப் பாடப்பட்ட பாடலை - ஒரு மாநில அரசு 'மொழி வாழ்த்துப் பாடலாக' - ஏற்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால் அந்தப் பாடலை - "மாநில அரசுப் பாடல்"- என்ற அந்தஸ்தைத் தந்து- அதைப் பாடும் போது - "எல்லாரும் எழுந்து நிற்க வேண்டும்"- ஆணையும் போடுவது என்பது...
தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மீது செய்யப்படும் 'திணிப்பு' ஆகாதா?
"இந்தியை மூன்றாவது மொழியாகக் கற்க விரும்புவோர் கற்கலாம் - அதைப் பாடத் திட்டத்தில் கொண்டு வர வேண்டும்"- என்று சொன்னாலோ...
"நவோதயா பள்ளிகளைத் திறக்க வேண்டும்"- என்று சொன்னாலோ...
"ஆஹா! ஹிந்தித் திணிப்பு"- என்று கூச்சலிடுபவர்கள்...
இப்போது - தமிழ்த்தாய் வாழ்த்தை 'மாநில அரசின் பாடல்' என்று கூறி - தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத சமூகங்களின் மீது திணிக்கலாமா?
அடுத்த விஷயம் உருது....
ஏற்கனவே இஸ்லாமிய சகோதரர்கள் '"வந்தே மாதரம் பாடலை நாங்கள் பாட மாட்டோம் - தாயை வணங்குகிறேன் என்ற பொருளில் அந்தப் பாடல் உள்ளது - எங்களுடைய கோட்பாட்டின் படி அல்லா ஒருவர்தான் ஏக இறைவன் - தாய் என்ற மனித உருவத்தை வணங்குவதை நாங்கள் ஏற்க மாட்டோம்!"- என்று வாதத்தை முன்வைத்தார்கள்!
தாயை உருவமாக்கி வணங்குவது அவர்களது "ஏக இறைத் தத்துவத்துக்கு"- முரணானது என்பது இஸ்லாமிய சகோதரர்களின் நிலைப்பாடு!
'வந்தே மாதரம்' (தாயை வணங்குகிறேன்) என்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்...
அதே போலத் தாய்வடிவம் தானே - "தமிழ்த் தாய் வாழ்த்து"- பாடப்படும் போது எழுந்து நின்று பாட வேண்டும் என்பதை ஏற்பார்களா?
அல்லது உருதுப் பள்ளிகளுக்கு மட்டும் - அல்லது இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் - இந்த 'மாநில அரசின் பாடலை' பாடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா?
இந்த ஆலோசனையை யார் முதல்வருக்கு வழங்கினார்களோ தெரியவில்லை!
ஆனால் தமிழக அரசு தேவையில்லாத சட்டச் சிக்கல்களுக்குள் தன்னைத் தானே ஆட்படுத்திக் கொண்டுள்ளது!
ஒரு பாடல் - "மொழி வாழ்த்துப் பாடல்"- அந்த மொழி பேசும் மாநிலத்தின் - அந்த மொழியைப் போற்றும் பாடலாக அமையலாம்!
ஆனால் அது எப்படி அந்த 'மாநில அரசின் பாடலாக' மாறி....
அந்த மொழி பேசாதவர்களையும்,
மொழியைத் தாய் வடிவமாக உருவ வழிபாடாக ஏற்காதவர்களையும் கட்டுப்படுத்தும் என்பது புரியவில்லை!
No comments:
Post a Comment