சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் ஒருவர் திருடன் என அடித்து கொல்லப்ப்பட்டபின் அவர் வயிற்றில் 5 நாட்கள் ஒரு பருக்கை உணவு கூட இல்லை என செய்தி வந்த போது கேரளாவோடு சேர்த்து தமிழகமும் அதிர்ந்தது.
இப்போது தமிழகத்தில் 5 வயது சிறுவன் 2 நாட்கள் எந்த உணவும் இல்லாமல் இறந்திருக்கிறான்.
ஔவை கூறியது போல வறுமை கொடியது அதிலும் இளமையில் வறுமை மிக கொடியது அதனினும் கொடியது பிஞ்சு வயதில் வறுமையும் பசியும்.
கலைஞர் கொண்டுவந்த ஓரு ருபாய்க்கு அரசி மூலமாகவும் ஜெயலலிதா கொண்டுவந்த விலையில்லா அரசி திட்டம், அம்மா உணவகம் மூலமும் பசியில்லாத தமிழகம் என்றே இத்தனை நாள் நினைத்திருந்தோம். அதையும் தாண்டி இருக்கும் ஒரு உலகத்தை இந்த சிறுவன் காட்டியிருக்கிறான்.
அவனுக்கு எப்படி இந்த நிலை ஏற்பட்டது என்பதை அரசு விசாரித்து காரணமானவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும். சாலைகளில் ஆதரவற்று இருக்கும் சிறுவர்களை கண்டறிந்து காப்பகத்தில் சேர்க்க அரசு முன்வரவேண்டும்..
நாட்டிலேயே முன்மாதிரியாக கலைஞர் கொண்டு வந்த பிச்சைகார்ர் மறுவாழ்வு திட்டத்தை ஆதரவற்றோர் மறுவாழ்வு திட்டமென முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தொடங்கி தமிழகத்தில் ஆதரவற்றோரே இல்லை என்ற நிலையை உருவாக்கிடவேண்டும். அதுவே அந்த சிறுவனுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.
No comments:
Post a Comment