Monday, December 20, 2021

எப்போதெல்லாம் தேர்தல்கள் வருகிறதோ அப்போதெல்லாம் நன்றாக கவனித்து பாருங்கள் துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு சென்று வரக்கூடிய புகைப்படம் வெளியாகும்.

 தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகிய மூவரும் இந்து மதம் சார்ந்த நிகழ்வுடன் இருக்கும் புகைப்படங்கள் திடீர் என வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இதன் பின்னணி என்பது என்ன என ஆராய்ந்தால் கடும் ஆச்சர்யம் காத்து இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்காரு அடிகளார் உடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி ஆச்சர்யத்தை கொடுத்தது அதே நேரத்தில் துர்கா ஸ்டாலின் எடைக்கு எடை இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது, இது தவிர்த்து உதயநிதி ஸ்டாலின் பெருமாள் கடவுளுக்கு தீபாரதனை ஏற்றும் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இது உண்மையில் வெளியாகி இருக்கிறது என்று சொல்வதை காட்டிலும் சரியான நேரத்தில் வெளிவிட பட்டு இருக்கிறது என்றே கூறலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள் இது குறித்து பத்திரிகையாளர் உதயகுமார் செந்திவேல் தெரிவித்ததாவது எப்போதெல்லாம் தேர்தல்கள் வருகிறதோ அப்போதெல்லாம் நன்றாக கவனித்து பாருங்கள் துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு சென்று வரக்கூடிய புகைப்படம் வெளியாகும்.
அதை சுற்றி சமூக வலைத்தங்களில் கருத்து மோதல்கள் உண்டாகும் இதன் மூலம் துர்கா ஸ்டாலின் இந்து மத நம்பிக்கை உடையவர் என்ற தகவல் பொது சமூகம் மத்தியில் உண்டாக்கும் அதே போன்றுதான் இந்த முறையும், இப்போது ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி என மூவரின் புகைப்படம் வெளியாவது நகராட்சி தேர்தல் அறிவிக்க படப்போவதற்கான அறிகுறி. எதிர்வரக்கூடிய நகராட்சி தேர்தலில் சென்னையை கைப்பற்றுவது முக்கியமோ இல்லையோ எப்படியாவது கோவையை கைப்பற்றியே ஆக வேண்டும் என ஆளும் தரப்பு தீவிரமாக இருக்கிறதாம் என்னதான் சிறுபான்மையினர் வாக்கு கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு கிடைத்தாலும் பெரும்பான்மை இந்துக்கள் வாக்கு கணிசமாக விழுந்தால் மட்டுமே கொங்கு மண்டலத்தை திமுக கைப்பற்ற முடியும்.
அங்கு உள்ள பலர் தீவிர கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் திமுக கடவுள் நம்பிக்கை இல்லாத கட்சி இல்லை என்ற பெயரை நீக்க இது போன்ற புகைப்படங்கள் ஆளும் தரப்பு மூலம் சுற்றவிடப்பட்டு அதன் மூலம் கருத்து உருவாக்கத்தை பெற முயற்சி செய்வதே இதன் வேலை என்கின்றார் உதயகுமார் செந்திவேல். சரி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை முதல்வர் சந்திக்க காரணம் என்ன என்ற கேள்விக்கு வட மாநிலத்தில் உள்ள மக்கள் என்ன சமூகம் என நீங்கள் யோசித்தாலும் 10.5% இட ஒதுக்கீடு ரத்து இரண்டிற்கும் முடிச்சு போட்டு பார்த்தால் விடை கிடைத்து விடும் என்கின்றார் உதயகுமார் செந்திவேல்.ஆக மொத்தத்தில் தற்போது மூவரின் புகைப்படம் வைரல் செய்யபடுவது எதிர் வரக்கூடிய நகராட்சி தேர்தலை முன்னிட்டு தான் என்றுதான் என தற்போது கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...