Tuesday, December 21, 2021

ஆதியிலே இருந்து வரும் பழக்க வழக்கங்களை மாற்ற இவர்கள் யார் அதுவும் ஒரு தனிப்பட்ட மனிதனின் விருப்புக்கு நாட்டையே எரிப்பாதா????

எதற்காக இப்போது இந்த மாற்றம் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய ஆளுநர்! போட்டு தாக்கு தாக்கு என தாக்கிய சம்பவம் !
தமிழர்கள் புத்தாண்டு தினத்தை சித்திரையில் இருந்து தை மாதமாக மாற்ற ஆளுநரின் ஒப்புதலை பெற தமிழக அரசு முயன்ற நிலையில் அதற்கு விளக்கம் கேட்டு முறையான பதில் வேண்டும் என ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. காலம் காலமாக மன்னர்கள் காலத்தில் இருந்து சித்திரை முதல் தேதி, தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. இதற்கு முன்னர் அமைந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், சித்திரை முதல் தேதிக்கு பதிலாக, தை மாதம் முதல் தேதி தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பெரும் எதிர்ப்பு அப்போதே கிளப்பியது ஆனால் கருணாநிதி கண்டு கொள்ளாமல், தை முதல் தேதியை, தமிழ் புத்தாண்டாக அறிவித்து அரசாணை வெளியிட்டார்.
இதையடுத்து கடந்த, 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசு, அந்த அரசாணையை ரத்து செய்தது. தமிழ் புத்தாண்டு, சித்திரை முதல் தேதியே கொண்டாடப்படும் என்றும் காலம் காலமாக நடைபெறும் நடைமுறைகளை மாற்ற கூடாது என அறிவித்து, அரசாணையும் வெளியிட்டது. இதையடுத்து அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டுகளாக, தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகிறது.தற்போது ஆட்சிக்கு வந்துள்ள, ஸ்டாலின் தனது தந்தையின் பழைய ஆணையை நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார் .
எனவே, கருணாநிதி முதல்வராக இருந்த போது உத்தரவிட்டது போல, தை முதல் தேதியை, தமிழ் புத்தாண்டாக அறிவிக்க முடிவு செய்து, அரசாணையும் தயார் செய்துள்ளனர் அதற்கு முன்னோட்டமாக, பொங்கல் பண்டிகையை ஒட்டி, ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள, பொங்கல் பரிசு தொகுப்பு பை மீது, தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள்
என அச்சிடப்பட்டு, அதை முன்னோட்டமாக வெளியிட்டு பல்ஸ் பார்த்தனர். இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் அதை பொருட்படுத்தாமல், தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க, அரசாணை தயார் செய்து கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது .ஆனால், கவர்னர் தரப்பில் தற்போதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை. ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியில் நீக்கப்பட்ட போது, அதற்கான காரணத்தை விளக்கி உள்ளனர்.
இதை தனது செயலாளர்கள் மூலம் அறிந்த கவர்னர், அரசாணை தொடர்பாக சில விளக்கங்களை ஆளும் தரப்பிடம் கேட்டுள்ளார் சித்திரை நாளை தையாக மாற்றுவதால் என்ன பலன் என கேட்டுள்ளார்.ஆளுநரின் கேள்விக்கு விளக்கம் அளிக்க அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று விளக்கம் அளித்துள்ளார். இது எங்கள் தலைவர் கருணாநிதியின் வாழ் நாள் கனவு எனவும் பல்வேறு ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார் ஆனாலும், ஆளுநர் திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க முடியுமா? பைகள் அச்சடிக்க கொடுக்கப்பட்ட ஆர்டரை என்ன செய்வது, முதல் முயற்சியே தடைப்பட்டு போனால் என்ன செய்வது என புலம்பி வருகிறதாம், நேற்றுதான் சக்தி வாய்ந்த முதல்வர் என ஆளுநர் புகழ்ந்தார் என்ற செய்தி வெளியான நிலையில் தற்போது ஆளுநர் தமிழக அரசின் அரசாணைக்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார் என்ற தகவல் ஆளும் தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது..
May be an image of 6 people and people standing


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...