மாரிதாஸ் அவர்கள் மீது திமுக அரசு தொடர்ந்து பல வழக்குகளை போட்டு கைது செய்து கொண்டிருக்கிறது.
பிஜேபி சட்ட போராட்டங்களின் மூலமாக அவரை வெளிக்கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கிறது.
ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல. ஒரு மாநில அரசுநினைத்தால் யாரை வேண்டுமானாலும் யார் மூலமாகவும் புகார் அளிக்க வைத்து கைது செய்ய முடியும் என்கிற நிலையில் வெறும் வழக்கறிஞர்களை வைத்து மட்டுமே. மாரிதாஸை வெளிக்கொண்டு வர முடியாது.
இதனால் மாநில பிஜேபி தலைவர்கள் மாரிதாஸ் அவர்களை வெளிக்கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகத்தை நாடினால் நல்லது.
தெலுங்கானாவில் மாரிதாஸ் மாதிரியே யூ டியூப் மூலமாக சந்திரசேகரராவ் அரசின் குற்றங்களை வெளிச்சத்திற்கு
கொண்டு வந்த பத்திரிக்கையாளர் டீன்மர் மல்லண்ணாவை தெலுங்கானா அரசு வரிசையாக பல வழக்குகளை போட்டு கைது செய்து கொண்டே இருந்தது
இதற்கு எதிராக தெலுங்கானா பிஜேபியினர் பல போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லை என்கிற நிலை இருந்த பொழுது தெலுங்கானா மாநில பிஜேபி
எம்பி அரவிந்த் தர்மபுரி அவர்கள் டீன்மர் மல்லண்ணாவின் மனைவியை டெல்லிக்கு அழைத்து சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் டீன்மர் மல்லண்ணாவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடம் எந்தெந்த பிரிவுகளில் என்ன காரணத்திற்காக டீன்மர்
மல்லண்ணா கைது செய்யப்பட்டார் என்று அறிக்கை கேட்க பதிலுக்கு தெலுங்கானா அரசு மத்திய அரசுடன் மோதாமல் டீன்மர் மல்லண்ணாவை விடுதலை செய்யும் வழிகளில் இறங்கியது.
இதனால் 35 வழக்குகளில் கைது செய்யப்பட்டடு 73 நாட்களாக சிறையில் இருந்த டீன்மர் மல்லண்ணாவை மாநில அரசு
புதிய வழக்குகளை பதியாமல் மல்லண் ணா விடுதலையாக ஒதுங்கி நின்றது. செய்து விட்டது.
இதை எதற்கு கூற வருகிறேன் என்றால் 2020 ல் போடப்பட்ட ஒரு வழக்கில் நேற்று மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதன் மூலமாக திமுக அரசு
அவ்வளவு சீக்கிரத்தில் மாரிதாஸ் அவர்களை சிறையில் இருந்து வெளியில் வர விடாது என்று தெளிவாக தெரிகிறது.
இந்த நிலையில் மாரிதாஸ் அவர்களின் மீது திமுக அரசு மேலும் புதிய வழக்குகள் பதியாமல் இருக்கவும் மேற்கொண்டு வரும் அடுத்தடுத்த கைதுகளில் இருந்து
அவரை காப்பாற்றவும் தமிழக பிஜேபிக்கு தார்மீக கடமை இருக்கிறது.
இதனால் மாரிதாஸ் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து சென்று மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க வைத்து அவரை திமுக அரசின் பழி வாங்கும் நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்ற தமிழக பிஜேபி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒரு பிஜேபி ஆதரவாளராக எனக்கு தோன்றுகிறது.
No comments:
Post a Comment