Friday, April 8, 2022

இப்படியும் ஒருவர் இருந்தார்;

 ஒரு சட்ட மன்ற உறுப்பினர் தன் தொகுதிக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கேள்வி எழுந்தால் நேராக கும்பகோணத்திற்க்கு அழைத்து சென்று பார்க்க சொல்லுங்கள்.

தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய காய்கறி சந்தை கட்டி அதில் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று எழுதி வைத்தார்.
பாதாள சாக்கடை திட்டம் இன்றும் தமிழகத்தில் மாநாகராட்சிகளில் கூட முழுமையாக நிறைவு பெற்று இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் குடந்தையில் ஒரு 15 ஆண்டுகள் முன்பே நிறைவேற்றினார்.
பல நகராட்சியில் பேருக்கு பேருந்து நிலையம் இருந்த போது, ஆறு நடை மேடை கூடிய பேருந்து நிலையம் அமைத்தார்.
அரபு நாட்டுல் இருக்கும் சுத்தமான மீன் மார்க்கெட் போல் கட்டினார்.
நகரத்தின் தனியார் ஆக்கிரமிப்பு அனைத்தையுமே ஒழித்தார். மகாமக குளத்தை சீரமைத்தார்.
அத்துனை கோவில்களும் 20-25 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் இல்லமல் இருந்த போது. அனைத்திற்கும் குட முழுக்கு நடத்தினார். ஆனால் ஒரு கோவில் உள்ளே கூட நுழையவில்லை. வாயில் எதிரில் தெருவில் ஓரு மர நாற்காலி போட்டுக்கொண்டு விழா சரியாக பாதுகாப்பாக நடக்குதா பார்த்த கொண்டு இருப்பார் இந்த கொள்கையாளர்.
ஒருமுறை சட்ட மன்ற தேர்தலில் திமுக அதிமுக இடையே களத்தில் அனல் பறக்கும் மோதல். தேர்தல் இரண்டு நாட்களுக்கு முன் அதிமுக வேட்பாளரின் தாயார் தவறி விட்டார். வேறு ஆள் என்றால் தன் பிரச்சாரத்தை முன் எடுப்பது குறித்து மட்டுமே நினைத்து இருப்பார்கள். ஆனால் இவர் ஒரு நாள் பிரசாரத்தை ஒதுக்கி வைத்து விட்டு இறுதி மரியாதை செலுத்திய பண்பாளர்.
5 முறை சட்டமன்ற உறுப்பினர், 3 முறை மந்திரி (வேளாண்மை, உள் ஆட்சி, கூட்டுறவு ) என பொறுப்பை வகித்தார் என்றாலும்கூட ஆனால் இவர் மீது ஒரு புகார் கூட கிடையாது.ஒவ்வொரு முறை ஆட்சி மாறியதும் பொரும்பாலும் முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குற்றம் சொல்லி அம்மையார் வழக்கு தொடுப்பார். இவர் நோக்கி விரல் கூட நீட்ட முடிந்து இல்லை.திராவிட கட்சியில் இப்படி ஒரு அமைச்சர் இருந்தார் என்றால் யாரும் நம்புவது கடினம். திராவிட கட்சியின் கடைசி தலைமுறை நேர்மையாளர்.
முழு செல்வாக்கு உடண் இருக்கும் போதே தன் குடும்பத்தினர் யாருக்கும் எந்த பரிந்துரை செய்தது சீட் கேட்க்காமல், தன் தொகுதியில் கட்சி நிறுத்திய புதிய வேட்பாளரை வெற்றி பெற வைத்தார்.
பதவில் இருந்து விலகிய நொடி மறைந்து போகும் அரசியல்வாதிகள் மத்தியில், தேர்தல் அரசியல் விட்டு ஒதுங்கி 8 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இன்றும் மக்கள் மனதில் இருக்கிறார்.
இதுவரை எனக்கு தெரிந்தவரை இவரை பற்றி யாரும் அவதூறு பேசியது இல்லை. அந்த அளவிற்கு அற்புதமான ஆச்சரிய மனிதர். இப்படி ஒருவர் இருந்தார என்று ஐயம் எழும் .
ஆம் ரத்தமும் சதையுமாக கோ.சி.மணி என்று ஒருவர் இருந்ததை குடந்தை மக்கள் பார்த்தார்கள். அதில் நானும் ஒருவன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...