இறைவனின் ஒவ்வொரு அவதாரமும் நமது வாழ்க்கைக்கு தேவையான
ஒரு விஷயத்தை உணர்த்துவதாகவும், கற்றுத்தருவதாகவும் அமைந்துள்ளன.
அதுபோல இறை வடிவங்களிலும் நமது வாழ்க்கைக்கு தேவையான சூட்சமங்கள் நிறைந்துள்ளன.
ஶ்ரீ லட்சுமி நரசிம்மர் வடிவமைப்பும் நமது வாழ்க்கைக்கு தேவையான
மிக முக்கியமான ஒரு விஷயத்தை உணர்த்தும் வகையில் உள்ளது.
பொதுவாக கடவுள் உருவங்கள் தனித்தனியாக தான் இருக்கும். ஆனால் லட்சுமி நரசிம்மர் இருக்கும் ஆலயங்களில் -
லட்சுமியும் நரசிம்மரும் ஒரே அம்சமாக ஒருங்கிணைந்து காணப்படுவார்கள்.
அதாவது நரசிம்மர் மடி மீது லட்சுமி அமர்ந்திருப்பார். லட்சுமியை அன்போடு அணைத்தபடி நரசிம்மர் இருப்பார். அந்த வகையில் லட்சுமி வந்த பிறகே நரசிம்மர் தம் வாழ்வில் பரிபூரணம் பெற்றார்.
பொதுவாக வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் கணவனை மனைவி சாந்தப் படுத்தி உபசரிக்க வேண்டும்.
கணவன் எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும், மனைவி முகத்தைப் பார்த்ததும் சாந்தமாக மாற வேண்டும். அது தான் உண்மையான தாம்பத்தியம்.
எந்த வீட்டில் பெண் சுதந்திரமாக முன் நிறுத்தப் படுகிறாளோ,
அந்த வீட்டில் லட்சுமி குடியிருப்பாள் என்பார்கள்.
இதைத்தான் மறை முகமாக
லட்சுமி நரசிம்மர் கோலம் நமக்கு சொல்கிறது.
இதை உணர்ந்து விட்டால் போதும் கணவன் மனைவிக்கு இடையில் எந்த மனஸ்தாபமும் வராது.
எனவே கணவனுக்கோ, மனைவிக்கோ சிறு வருத்தம் ஏற்பட்டாலும் லட்சுமி நரசிம்மர் இருக்கும் திசை நோக்கி,
“லட்சுமி நரசிம்மா” எனது
குடும்பத்தை வாழையடி வாழையாக வாழவைக்க வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தாலே போதும் , லட்சுமி நரசிம்மர் ஓடோடி வந்து உதவி செய்வார் என்பது உண்மை..!
ஓம் நமோ நாராயணா
No comments:
Post a Comment