Wednesday, April 13, 2022

தன்னம்பிக்கையே நோய்களையும், உடல் வலியையும், மனவேதனைகளையும் நீக்குகிறது.

 ஒவ்வொரு தனி மனித வெற்றிக்கு பின்னும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகமும், அதை தொடர்ந்து வந்த அவமானங்களும், அரவணைப்பில்லா வாழ்க்கையும், அளவில்லா தன்னம்பிக்கையும், அவர்களின் விடாமுயற்சியும், உள்ளே சுமக்கும் ரணங்களும் காரணமாய் அமைந்துருக்கின்றது.

கட்டளையை முழு வேகத்துடனும் விருப்பத்துடனும் அடிக்கடி இட்டால் நீங்கள் உண்மையில் அதை அடைய செயலிலும் இறங்கிவிடுவீர்கள்.
தன்னம்பிக்கையே உலகின் மிகச்சிறந்த ஆயுதம். இந்த ஆயுதம் இருந்தால் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு அதற்கான காரணகாரியத்தை ஆராய்ந்து தீர்வு காணமுடியும்.
தன்னம்பிக்கையே நோய்களையும், உடல் வலியையும், மனவேதனைகளையும் நீக்குகிறது.
தன்னம்பிக்கையே நீடித்த நல்வாழ்க்கையை அமைத்துத் தருகிறது.
விரும்புகிற வாழ்வை ஏற்படுத்தி கொள்வது எல்லோர்க்கும் எளிதானது இல்லை.
அதே நேரம் கிடைக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்வதும் யார்க்கும் எளிதாக இல்லை.
இரண்டுக்கும் நடுவில் மனிதன் ஊசலாடி கொண்டிருக்கிறான்.
எல்லோரையும் திருப்திப் படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு. எனவே, உன் மனம் திருப்தி அடையும் படி வாழ்க்கையை ரசித்தபடி வாழ்ந்து விட்டு செல்.
காலம் என்ற சிற்பி நம்மை செதுக்கிக் கொண்டிருக்கிறான். நாம் சிற்பமாவதும் சிதறி விழும் கற்களாவதும் நாம் வாழுகிற வாழ்க்கையை பொறுத்திருக்கிறது.
சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தால் சிற்பம் ஆகலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...