Wednesday, April 13, 2022

சூழலை நம்புங்கள்.... பிரயோகப்படுத்தும் வார்த்தைகளில் கவனமாய் இருங்கள்....

 நம்பிக்கை வையுங்கள்....

இல்லையெனில் எதுவுமில்லை என்ற நிலைக்கு வராதீர்கள்....
யாரை நம்பியும் இங்கு நாம் பிறக்கவில்லை...
நமக்கு நாம் தான் இறுதி வரை வருவோம் என்ற ஒன்றை மட்டும் நினைவில் வைத்திருங்கள்.....
பிரச்சனை ஓய்ந்தது..
எந்தப்பழக்கத்தையும் சன்னல் வழியாக தூக்கி எறிந்து விட முடியாது.....
கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்ற வேண்டும்......
எந்தப் பிரச்சினையாக இருந்ததாலும் சரி......
மகிழ்ச்சியாக இருந்ததாலும் சரி.....
அது ஓரு சில மணி நேரங்களிலோ....
சில நாட்களிலோ மறைந்து விடும்...
எந்தத் துன்பமாக இருந்தாலும் அதுவும் நம்முடன் இருந்து விடப் போவதில்லை...அதனால் கவலை கொள்ளாமல் ....
பிரச்சினையை எதிர்நோக்கும் அளவிற்கு மனதைப் பக்குவப்படுத்திக் கொள்வோம்..... உனக்கு ஒருவர் தவறு செய்தால்.....
முதலில் மன்னிப்புக் கொடுங்கள்.....
பிறகு கவனமாக இருங்கள்....
முடிவில் விலகி விடுங்கள்....
தவறுகள் பல தடவை செய்வது தெரிந்தே தான்.....
இங்கு வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்களை விட....
பொறுத்துக்கொண்டு
வாழ்பவர்கள் அதிகம்..
அளவிற்கு அதிகமான அன்பு முதலில் பிரமிக்கப்பட்டு
பின் ரசிக்கப்பட்டு
தொல்லையாகி சலிக்கப்பட்டு
இறுதியில் உதாசீனப்படுத்தப்படுகிறது....
ஞானத்திற்கும் ஆணவத்திற்கும் ஒரு *நூலிழை* தான் வித்தியாசம்...
நம்மிடம் ஏதுமில்லை என்பது *ஞானம்*....
நம்மைத் தவிர எதுவுமில்லை என்பது *ஆணவம்*
வாடிப்போகும் மலர்களின் இதழ்கள் கூட சிரிக்கிறது.....
வாழப்பிறந்த நாம் ஏன் அழவேண்டும் ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழுங்கள்......
வருத்தம் இரண்டே வகை தான்....
நினைத்தது நடக்கவில்லையே என்றும்....
நடந்ததையே நினைத்து வருந்துவதுமே.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...