*இந்தியாவில் மோடி என்ன அந்தக் கடவுளே வந்தால் கூட ஒரு சிலர் மீது கை வைக்க முடியாது. அவர்கள் அவ்வளவு பெரிய சர்வ வல்லமை படைத்தவர்கள்.*
சோனியா குடும்பத்தினர்
சிதம்பரம் குடும்பத்தினர்
கருணாநிதி குடும்பத்தினர்,
மன்மோகன், அகமது பட்டேல் போன்றவர்கள் தண்டிக்க முடியாத மிகப்பெரிய சக்திகள் என்று அது பெரிய லிஸ்ட் உள்ளது
மோடி அரசாங்கம் இன்னும் ஒரு பத்து வருடம் தொடர்ந்து இப்பொழுது உள்ள நீதிப் பெருச்சாளிகளையும் காங்கிரஸுக்கு விசுவாசமாக உள்ள மத்திய அரசின் ஊழல் பெருச்சாளி அதிகாரிகளையும் விரட்டி அடிக்கும் வரையிலும் இவர்கள் எவர் மீதும் மோடியால் கை வைத்து விட முடியாது.
இதை இன்று ரிபப்ளிக் டிவி பேட்டியில் குருமூர்த்தி மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளார்.
நீதித் துறை குறிப்பாக சென்னை நீதிபதிகள் சிதம்பரம்களுக்கு வெகு அனுசரணையாக இருந்தார்கள் என்றும் அவர்கள் விசாரணையை அனுமதிக்கவே விடவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் சிபிஐ முதல் அனைத்து துறைகளிலும் காங்கிரஸின் அடிவருடிகளே அவர்களால் அவர்களுக்கு விசுவாசமான ஊழல் பெருச்சாளிகளே அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள். பல ரிட்டையர்ட் அதிகாரிகள் இங்கு மிகுந்த வன்மமுடன் மோடி கொலை செய்யப் பட வேண்டும் என்று கைக் கூசாமல் ஃபேஸ்புக்கில் சொல்லுகிறார்கள் என்றால் அவர்கள் ஆட்சியில் இருந்தால் எந்த அளவுக்கு காங்கிரஸுக்கு ஆதரவாக செயல் பட்டிருப்பார்கள் செயல் படுவார்கள் என்பதை ஊகிக்க முடியலாம்
இந்த நிலையில் மோடி அரசாங்கம் பெரும் பெரும் ஊழல் வழக்குகளை விசாரிப்பதும் தண்டனை வாங்கித் தருவதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தாயாநிதி மாறன்களுக்கும் சிதம்பரங்களுக்கும் உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு வாய்தாக்களும் தள்ளுபடிகளும் பந்தாடல்களும் நீதிபதிகளின் ஆதரவுகளுடன் நடத்தப் பட்டு வருவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்படி கீழேயிருந்து உச்சம் வரை அழுகிப் புரையோடிப் போயிருக்கும் நீதி அமைப்புகளும் அதிகார வர்க்கமும் இருக்கும் பொழுது மோடி அரசாங்கத்தின் எல்லைகள் மிக மிகக் குறைவே
எல்லோரும் மிக எளிதாக மோடி எந்தவொரு ஊழல் குற்றவாளியையும் இது வரை தண்டிக்க முயலவில்லை என்று சொல்லி விடுகிறோம் ஆனால் அப்படி குறை சொல்லும் அதே ஆட்கள் கார்த்திக் சிதம்பரம் வழக்கில் முட்டுக் கட்டை போடும் நீதிபதிகள் குறித்தோ அல்லது மாறன்களுக்கு எல்லையில்லா வாய்தாக்களை அள்ளி வழங்கும் நீதிபதிகள் குறித்தோ கண்டனம் தெரிவிப்பதில்லை. மோடியினால் நீதிபதிகளை எதுவும் செய்ய முடியாது. அவர்கள் கருணாநிதிகளினாலும் சோனியாக்களினாலும் நியமிக்கப் பட்ட அடியாட்கள் மட்டுமே. அவர்களை மீறி எவரையும் தண்டித்து விட முடியாது
மோடி சர்க்காரால் அதிக பட்சம் விசாரணையை முடிந்த அளவில் நடத்தி போதுமான ஆதாரங்களை முன் வைத்து விசாரணை செய்வது மட்டுமே அதற்கு மேலாம நீதிபதிகள் அவர்களை விடுதலை செய்து விடுவார்கள் என்பதினால் இந்த நிலை மாறும் வரை அனைவரையும் பல்வேறு விசாரணை கட்டங்களிலும் அப்படியே விடுதலை ஆனாலும் அப்பீல்கள் மூலமாகவோ தொடர்ந்து பிடியில் வைத்திருந்து காலம் வரும் பொழுது நேர்மையான நீதி அமைப்பு உருவாகும் பொழுது தண்டனை வாங்கிக் கொடுப்பது மட்டுமே.
ஆகவே எவரும் சிதம்பரத்திற்கோ அவனது மகனுக்கோ எந்தவொரு வழக்கிலும் தண்டனை கிடைத்து விடும் என்று நம்ப வேண்டாம். அவர்களுக்கு எல்லாம் மோடி தண்டனை வாங்கிக் கொடுக்க இன்னும் ஒரு பத்து வருடங்களாவது குறைந்த பட்சம் ஆட்சியில் தொடர வேண்டும். அது வரை நடப்பவை அனைத்துமே நாடகங்களாக மட்டுமே இருக்கும்
இந்த வழக்கில் மிகத் தெளிவாக சிபிஐயும் அமுலாக்கத்துறையும் போதுமான அளவு ஆதாரங்களையும் சாட்சிகளையும் சேகரித்துள்ளதாகவே தெரிகிறது. இதில் முதல் குற்றவாளி சிதம்பரமே. அவன் மந்திரியாக இருந்த பொழுது தன் மகனிடம் லஞ்சம் கொடுத்தால் வேலை முடித்துத் தருவதாகச் சொல்லி முகர்ஜிகளும் லஞ்சத்தை அவன் மகன் மூலமாக அளித்து தங்களுக்கான வேலைகளையும் சாதித்துள்ளார்கள். இதில் பணம் கொடுத்தவர்கள் அப்ரூவராக மாறியுள்ளார்கள். பணம் சென்ற பாதையும் தெரிந்து விட்டது. கார்திக்கை கைது செய்து விசாரணை முடிந்த கையோடு பிசிதம்பரத்தையும் கைது செய்து விசாரித்து கேசை நடத்த வேண்டும். அப்படியே நடந்தாலும் கீழ்க் கோர்ட் ஹைக்கோர்ட் சுப்ரீம் கோர்ட் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் என்று இன்னும் நூறு வருடங்களுக்கு இந்த வழக்கை சிதம்பரங்களினால் இழுக்க முடியும். அந்தத் திமிரினால்தான் பெரிய தியாகி போல கை காட்டிக் கொண்டு காரில் ஏறுவதும் அதிகாரிகளை மிரட்டுவதையும் அவர்களினால் செய்ய முடிகிறது
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு பெண் நீதிபதி ஒருவர்
இந்த பெண் நீதிபதி ஆகும் முன்பு வரை சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினிக்காக வக்கீலாக நீண்ட காலம் வாதாடினார்.
தற்போது இவர் நீதிபதி ஆன பிறகு இவரிடமே சிதம்பரம் ஊழல் வழக்கு விசாரணைக்கு வந்தது...
பொதுவாக மிகவும் தெரிந்த நபர்கள் வழக்கை மேற்படி நீதிபதிகளே விசாரிக்க மறுத்து தவிர்த்து விடவேண்டும் அதுதான் நடைமுறை நேர்மை...
ஆனால் இந்த பெண் நீதிபதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்...
அமலாக்க துறை அரசு தரப்பில் தலைமை நீதிபதியிடம் இது தவறு என்று முறையிட்டு தற்போது வேறு நீதிபதி அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது...
நீதி துறைகளில் நீதிபதிகள் தார்மீக
தரத்தை இழந்து வருகின்றனர்...
நீதிமன்றங்களை நீதிபதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதில் சந்தேகமில்லை...
நமக்கு தெரிந்தது அவ்வளவுதான்.. இன்னும் எவ்ளோ கருப்பு ஆடுகள் இருக்கிறதோ? நீதித்துறையில் கடவுளுக்கே வெளிச்சம்..
ஒரு கூடுதல் ஆச்சரியமான விஷயம்.. இந்த நீதிபதி அரசியல்
விமர்சகர் ஒருவர் அடிக்கடி தொலைபேசியில் விவாதம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நபரின் மனைவி...
இப்போது புரிகிறதா ??
நீதிமன்றம் ஏன் இவ்வளவு இழுத்து அடித்து தண்டனை தர மறுக்கிறது என்று
இப்போது புரிகிறதா? டி.வி.விவாதங்களில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக ஜால்ரா அதிகமாக அடிக்கிறார்கள் என்று
இப்போது புரிகிறதா?
ஊழல்வாதிகளை மோடி அரசு தண்டிக்க முடியாத நிலையில் போராடுகிறது என்று
இந்தியாவைப் பொருத்த வரை கடவுளை விட அதிக வல்லமையும் அதிகாரமும் பெற்றவர்கள் இந்த சோனியா, சிதம்பரம், கருணாநிதி குடும்பத்தினர். *இவர்களை அந்தக் கடவுளினால் கூட கோர்ட்டுகள் மூலமாகத் தண்டித்து விட முடியாது என்பதே கேவலமான உண்மை நிலவரம்*
இதையும் மீறி தான் மோடி அமித்ஷா இருவரும் காங்கிரஸ் திமுக ஊழல்வாதிகளை தண்டிக்க போராடி வருகிறார்கள் ...என்று தோன்றுகிறது ...
No comments:
Post a Comment