நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.
எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்
*"தெரியாது', "நடக்காது', "முடியாது' , "கிடைக்காது' என சொல்பவர்களை விரட்டி விடுங்கள்.
உற்சாகமாக இருங்கள். சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.
இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்து விட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.
பவர்ஃபுல்லாக உணருங்கள் உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம்.
உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் உங்கள் வாழ்வு இனிக்கும்.
வாழ்க்கை தரும் துன்பங்கள் வலிமையானதுதான். ஆனால், மனிதனின் நம்பிக்கை அதைவிட வலிமையானது.
தவறேதும் செய்யாமல் தன்மானத்தைச் சீண்டும் நிலை வந்தால் எவரையும், எங்கேயும் எதிர்த்து நில்லுங்கள் தப்பேயில்லை.
அழைப்பு வரும் வரை உழைப்பு அவசியம். அவமானத்தின் வலி அழகிய வாழ்க்கைக்கான வழி.
நகர்ந்து கொண்டே இருங்கள். ஒவ்வொருவரிடமிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டு உங்கள் வாழ்க்கைப் பாதையில்.
கட்டெறும்பு கட்டு மரத்தைக் கூட, கனம் பார்க்கும். தன் மேல் கொண்ட நம்பிக்கையால்,
காற்று கூட கரைகளை உடைத்து எறியும், தன் மேல் கொண்ட நம்பிக்கையால்.
உங்கள் மேல் நம்பிக்கை கொண்டு முன்னேறி வாருங்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் வெற்றி நிச்சயம்.
No comments:
Post a Comment