நம்பிக்கை தான் எல்லா உறவுகளுக்கும் அடித்தளம். இரண்டு பக்கமும் நம்பிக்கை எனும் கயிற்றை பற்றிப் பிடித்தால் தான் அந்த உறவில் அன்பு பலமாக இருக்கும்.
போலியான இந்த உலகில் எல்லோருக்கும் கேலியாகி போனது சிலரின் உண்மையான அன்பு.
நீங்கள் செய்த பாவம் விதியாக உங்களை தொடரும். நீங்கள் செய்த புண்ணியம் மதியாக உங்களுக்கு உதவும்.
பாவம் கேள்வி கேட்கும் போது புண்ணியம் பதில் சொல்லும். இது தான் கர்மா.
ஆயுள் முழுவதும் கொத்தினாலும் ஒரு மரத்தையும் சாய்த்ததில்லை மரங்கொத்தி.
வாழ்க்கைத் தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள். விடைகளை அறிந்தவர்கள் இல்லை. வினாக்களை அறிந்தவர்களே.
சரியான தருணத்திற்காக காத்திருக்காதீர்கள். கிடைக்கின்ற தருணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்.
சில விஷயங்கள் உங்களுக்கு முக்கியம் எனில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இல்லை என்றாலும் அதை நீங்கள் செய்ய வேண்டும்.
சகுனிகள் நிறைந்த இவ்வுலகில் சத்தியத்தை மட்டும் வைத்து ஒன்றும் செய்யமுடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே மிகவும் நல்லது.
யார் நினைத்தாலும் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கலாம். நாம் நினைத்தால் மட்டும் பின்பற்ற முடியும்.
எதிர்பார்ப்புகளை அளவோடு வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களின் எதிர்பார்ப்புகளில் நீங்கள் இல்லாமலும் போகலாம்.
No comments:
Post a Comment