Friday, April 1, 2022

தலைப்பு #செய்திகள்.

 *அரசு ஊழியர்கள் இனிமேல் லஞ்சம் வாங்குவதில்லை என முடிவு செய்திருக்கிறார்கள்...

*அரசியல் தலைவர்கள் இனிமேல் ஊழல் செய்வதில்லை என சத்தியம் செய்திருக்கிறார்கள்...
*ஓட்டுக்கு இனி பணம் தந்தால் வாங்க மாட்டோம் நேர்மையாகத்தான் வாக்களிப்போம் என வாக்காளர்கள் கூறியுள்ளனர்!
*நோயாளிகளிடம் இனி அநியாயமாக கண்ட டெஸ்ட் எடுக்கச்சொல்லி பணத்தை கொள்ளை அடிக்க மாட்டோம் என மருத்துவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்...
*கூலி சேதாரம் என்று அநியாயமாக பணத்தை பிடுங்கும் செயல்களையும், மச்சம் குறைந்த நகைகளை தரமான நகை என்றும் இனி மக்களை ஏமாற்றி அவர்கள் தலையில் சுமத்த மாட்டோம் என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்...
*1000ரூபாய் மதிப்புள்ள துணிகளை 5000ரூபாய் என்று விற்று வாடிக்கையாளர்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் பாதகத்தை இனி செய்வதில்லை என ஜவுளிக்கடை சங்கம் கூறியுள்ளது...
*மருந்து மாத்திரைகளில் பாதிக்கு பாதி லாபக்கொள்ளை அடித்து மக்களை வேதனையில் ஆழ்த்தியதை கைவிட்டு இனி 10சதவீதத்திற்கு மேல் லாபம் வைத்து விற்க மாட்டோம் என மெடிக்கல்ஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்...
*கலப்படப்பொருட்களை தந்து மக்கள் உடம்பை கெடுத்ததற்கு பிராயசித்தமாக இனி தாய்மீது ஆணையாக கலப்படப்பொருட்களை விற்க மாட்டோம் என மளிகை வியாபாரிகள் கூறியுள்ளனர்...
*ஓட்டல்களில் தரமில்லா உணவுகளை தரமானதாக உருமாற்றி விற்பனை செய்வதுடன், அநியாய விலை வைத்து கொள்ளை அடிப்பதால் வயிறெரிந்து செல்லும் மக்கள் மனம் குளிர இனி தரமான உணவுகள் சரியான விலையில் மட்டுமே வழங்குவோம் என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை விட்டுள்ளது...
*ரேஷன்கடைகளில் இனி பொருட்களை எடை குறைந்து போடுவது நிரூபிக்கப்பட்டால், அப்படி வழங்கப்பட்ட பொருளில் இரண்டுக்கிலோ அபராதமாக நுகர்வோருக்கு வழங்கப்படும் என ரேஷன்கடை அதிகாரி அறிவித்துள்ளார்...
*அவசரத்திற்கு கடன் வாங்கும் மக்களிடம் இனி மணிநேரவட்டி, நாள்வட்டி, மீட்டர்வட்டி, கூட்டுவட்டியென வாங்கி இம்சை செய்யாமல் நேர்மையாக மாதத்திற்கு நூற்றுக்கு ஐம்பது பைசா மட்டுமே வட்டியாக பெறுவோம் என வ(ஈ)ட்டி தொழில் செய்பவர்கள் முடிவு செய்துள்ளனர்...
*குடியால் குடும்பமே பரிதவிக்கும் நிலையை கருத்தில் கொண்டு இனி மதுக்கடைகள் மற்றும் சிகரெட்டுகள் நாட்டில் எங்கும் விற்கப்படாது என அரசு மனிதாபிமானத்துடன் அறிவித்துள்ளது...
*மக்கள் உழைப்பை நம்ப வேண்டும் என்ற நோக்கில் இனி இலவசம் என்ற பெயரில் எதுவும் வழங்கப்படாது என அரசு முடிவெடுத்துள்ளது...
*கோவில் மன அமைதிக்காக சுவாமி தரிசனம் செய்த மட்டும்தான் என்பதை கருத்தில் கொண்டு கட்டண தரிசனம், விஜபி தரிசனம், உண்டியல் காணிக்கை, தட்டு காணிக்கை, விழாக்கால விற்பனையாளர்களிடம் அடாவடி வசூல், அத்தனையும் தடை செய்யப்படுகிறது...
*கல்வியில் கொள்ளை அடிக்கும் தன்மை அதிகரித்து விட்டதால் அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் அரசுடைமையாக்கப்படும் என அரசு மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளது...
*படிக்கும் மாணவ மாணவரின் திறமைகளை கணிக்கும் விதமாக இனி ஜாதி அடிப்படையில் எங்கும் ஒதுக்கீடு கிடையாது, படிப்பவருக்கே முன்னுரிமை எனவும் அரசு கூறியுள்ளது...
*வக்கீல்கள் இனி கொள்ளையடிப்பவர்கள்,திருடுபவர்கள், கொலை செய்பவர்கள், சொத்தை ஏமாற்றுபவர்கள் போன்றவர்களுக்கு வாதாட மாட்டோம் என சாமி முன்பு கற்பூரம் அணைத்து சத்தியம் செய்துள்ளார்கள்...
*காவல்துறையில் மக்களை இம்சிக்கும் மாமூல், கட்டப்பஞ்சாயத்து, தொப்பை போன்றவைகள் ஒழிக்கப்பட்டு நேர்மையாக செயல்படுவது என உறுதியேற்றுள்ளது...
*
*
*
*
*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...