Sunday, December 4, 2022

இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சா இனி சோப்பை மிக்ஸி ஜார் உள்ள தான் போட்டு வைப்பீங்க. இதனால், நிறைய பணத்தை கூட மிச்சம் பிடிக்கலாம்.

 சோப்புக்கும் மிக்ஸி ஜாருக்கும் என்ன சம்பந்தமாக இருக்கும். சோப்பை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு என்ன செய்யலாம். என்று உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா. இருந்தா, டிப்ஸை படிக்கிறதுக்கு முன்னாடியே கெஸ் பண்ணுங்க. ஆனா நீங்க எதிர்பார்க்காத ஒரு சூப்பரான ஐடியாவை தான் இன்று இந்த குறிப்பின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இல்லத்தரசிகளுக்கு இது தேவையான ஐடியா. அவசரத்துக்கு தேவை எனும்போது பயன்படுத்தி பாருங்கள். பிடித்திருந்தால் நீங்கள் இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றிக் கொள்ளலாம். இந்த குறிப்புக்கு 1 துணி சோப்பு, 1 குளிக்கின்ற சோப்பு தேவை. நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய சோப்பாக இருந்தாலும் சரி, ஆனால் அது கொஞ்சம் ஈரம் இல்லாத காய்ந்த சோப்பாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். கேரட் பீட்ரூட் சீவும் கிரேடர் இருக்கும் அல்லவா. அதில் துணி சோப்பை நன்றாக துருவிக் கொள்ளுங்கள். உங்களுக்கு எவ்வளவு தேவையோ 1/4 கப் அளவு துணி சோப் துருவல் கிடைத்தால் கூட போதும்.  அடுத்து இதே போல குளிக்கின்ற சோப்பையும் துருவிக் கொள்ளுங்கள். 2 டேபிள் ஸ்பூன் வரும் அளவுக்கு துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த இரண்டு சோப்பு துருவலையும் ஒரு கிண்ணத்தில் போட்டு ஐந்திலிருந்து பத்து நிமிடம் வெயிலில் காய வைத்து விடுங்கள். லேசாக ஈரப்பதம் இருந்தால் கூட அது காய்ந்து விடும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் நைஸ் ஆன பவுடராக கிடைத்து விடும். இதில் குளிக்கின்ற சோப்பு கலந்திருப்பதால் இந்த சோப்பு தூள் நல்ல வாசமாகவும் இருக்கும். அவ்வளவு தான். நைசாக இருக்கக்கூடிய இந்த பவுடரை துணி துவைக்க பயன்படுத்திக் கொள்ளலாம். நிறைய சோப்பை துருவி அரைத்து ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டாலும், வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போதும் இதை போட்டுக் கொள்ளலாம். கையில் துணி துவைப்பதாக இருந்தால் தண்ணீரில் போட்டு கரைத்தும் இதை சுலபமாக நீங்கள் பயன்படுத்தலாம். கடையில் வாங்கிய சோப்பு பவுடர் தண்ணீரில் கரைவதற்கு நேரம் எடுக்கும். இது அந்த அளவுக்கு கூட நேரம் எடுக்காது. சோப்பு பவுடர் வாங்குவதைவிட செலவும் உங்களுக்கு குறைவாகத்தான் ஆகும். (சொப்பு அரைத்த மிக்ஸி ஜாருக்கு உள்ளே பாத்திரம் தேய்க்கும் லிக்விட், 1 ஸ்பூன் கல் உப்பை போட்டு ஒரு ஓட்டு ஓட்டி கழுவி விட்டால் சோப்பு வாடை எல்லாம் மீண்டும் அடிக்காது.) எப்போதுமே இந்த குறிப்பை பின்பற்ற வேண்டும் என்று சொல்ல வரவில்லை. அவசரத்துக்கு சோப்புத்தூள் தீர்ந்து விட்டது. துணி துவைக்கணும் எனும் போதும் இந்த குறிப்பை வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் பயன்படுத்தி பார்க்கலாம். இது துணி சோப்பில் தயார் செய்த துணி பவுடர் என்பதால், மிகக் குறைந்த அளவில் தண்ணீரில் போட்டு கரைத்தாலே நமக்கு நிறைய நுரை பொங்கி வரும். நம்முடைய துணிகளில் இருக்கும் அழுக்கும் சுத்தமாக போகும். எப்படி என்றால் என்னதான் வாஷிங் பவுடரை போட்டு ஊற வைத்து துணியை துவைத்தாலும், சோப்பு போட்டு துணி துவைத்தால் தானே, துணி வெள்ளையாக மாறுகிறது. அந்த சோப்பையே பவுடராக மாற்றி துணியை ஊற வைத்தால் அழுக்கு சீக்கிரம் போய்விடும் அல்லவா. பெரிய சோப்பை துருவி தான் இப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. கடைசியாக மிச்சமாக சின்ன சின்ன சோப்புகள் இருக்கும் அல்லவா அதையெல்லாம் தூக்கி போடாமல் சேகரித்து வைத்து கூட இந்த மாதிரி பவுடர் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...