ஒன்றாம் திருப்படி: சூரிய பகவான்
இரண்டாம் திருப்படி: சிவன்
மூன்றாம் திருப்படி: சந்திர பகவான்
நான்காம் திருப்படி: பராசக்தி
ஐந்தாம் திருப்படி: அங்காரக பகவான்
ஆறாம் திருப்படி: முருகன்
எட்டாம் திருப்படி: விஷ்ணு
ஒன்பதாம் திருப்படி: வியாழ (குரு) பகவான்
பத்தாம் திருப்படி: பிரம்மா
பதினொராம் திருப்படி: சுக்கிர பகவான்
பனிரெண்டாம் திருப்படி: இலட்சுமி
பதிமூன்றாம் திருப்படி: சனி பகவான்
பதிநான்காம் திருப்படி: எம தர்ம ராஜன்
பதினைந்தாம் திருப்படி: இராகு பகவான்
பதினாறாம் திருப்படி: சரஸ்வதி
பதினேழாம் திருப்படி: கேது பகவான்
பதினெட்டாம் திருப்படி: விநாயகப் பெருமான்
இதில் கவனிக்கப்பட வேண்டியவை ஒற்றைப்படை வரிசையில் நவக்ரஹ தேவதாக்களும் இரட்டைப்படை வரிசையில் தெய்வக் குடும்பமும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவேதான் படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது படிபூஜை நடைபெறும் தினத்தன்று 18 படிகளை பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரித்து அவற்றிற்கு கீழே 18 படி ஏறுமிடத்தில் பிரதான தந்திரி 18 வெள்ளி கலசங்களை வைத்து படிபூஜை செய்வார்.
ஒவ்வொரு படியிலும் பீடபூஜையும், மூர்த்தி பூஜையும் நடத்துவார் பிறகு 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெறும் நீராஞ்சன தீபம் (தேங்காயை இரண்டாக உடைத்து அதன் மூடியில் நெய் ஊற்றி ஏற்றப்படுவது) காண்பிப்பார் படிபூஜைக்கு உபயோகப்படுத்தும் பொருட்கள் அனைத்தும் வெள்ளியால் செய்யப்பட்டவையாகும்.
18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். நைவேத்யம் காட்டிய பின் பிரசன்ன பூஜை செய்வார் பிறகு கற்பூர ஜோதி ஏற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு சபரிமலை பிரதான தந்திரியும் மேல்சாந்தியும் மற்றும் சில பக்தர்களும் படியேறிச் செல்வார்கள் பிறகு சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப் பாயசம் நைவேத்யம் செய்து தீபாராதனை காண்பிப்பார்கள்.
ஓம் சரணம் ஐயப்பா
No comments:
Post a Comment