Thursday, December 1, 2022

நாம் வந்த வேலையை விட்டு விட்டு என்ன வெல்லாம் முட்டாள் தனம் செய்திருக்கிறோம் என்பது தெரிய வரும்.

 நாம் இவ்வுடலை விட்டு வெளியேறியதும் நம்மை நமக்கு வேண்டியவர்கள் வந்து அழைத்து செல்வர்.

புண்ணியம் செய்திருந்தால் மிகப் பிரமாண்டமான ஒளியை (அதைத் தான் கடவுள் என்கிறோம்)நோக்கி ஈர்க்கப் படுவோம்.
அப்போது அது வரை இந்த பிறவியில் நிகழ்ந்தது அத்தனையும் திரைப்படம் போல் நமக்கு காட்டப்படும்
பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆகி வெளியேறுபவர்களுக்கு கமலஹாசன் போட்டுக்காட்டுகிறாரே
அது போன்ற பயணவீடியோ ஒன்று கட்டாயம் காட்டப்படும்....
அதை காணும் பொழுது நாம் இந்த பிறவியில் செய்த தவறுகள் நமக்கு தெரிய வரும்.
நாம் வந்த வேலையை விட்டு விட்டு என்ன வெல்லாம் முட்டாள் தனம் செய்திருக்கிறோம் என்பது தெரிய வரும்.
நாம் கற்றுக் கொள்ள முயலாமல் வெட்டி பந்தா பண்ணிக் கொண்டு நல்ல வாய்ப்பை தவற விட்டதை அறிந்து வருந்த வேண்டி வரும்.
நான் எவ்வளவு பெரிய ஆள்.என் ஜாதி ,மதம், பணம் என்று பிறரை விட நான் உயர்ந்தவன் என்று பெருமிதப் பட்டுக் கொள்வதில் நிறைவு காண முயல்கிறோம்
இந்தமாதம் பவனில் கலவரம் நடந்த அடுத்தநாள் அதாவது பதினாறாம் தேதி தநாகாக நிர்வாகிகள் கூட்டத்திற்காக சத்தியமூர்த்தி பவனுக்கு வரும்போது
நான் தங்கியிருந்த சர்மானி ஹோட்டலிலிருந்து எதிரில் இருந்த பவனுக்குள் நுழையும்வரை
அழகிரியின் அரசியல் மகன் "பொலிட்டிகல் சைல்ட் நான்" என்று
அவரை மேடையில் வைத்துக்கொண்டே பேசி
அவரிடம் ஒப்புதல் வாக்குமூலமும் வாங்கியதாக நினைத்துக் கொண்டிருக்கும் சகோதரர்
ரஞ்சன்குமார் என்னிடம் வந்து தேவையில்லாத வார்த்தைகளில் பேசி அடிக்கத்தயார் ஆனவராக
என்னை திட்டித்தீர்த்தார்...
இவர் இப்படி நிச்சயம் என்னை வம்பிழுப்பார் என்று தெரிந்தே தயாராக வைத்திருந்த என் போன்களை ஆன் செய்து ஆடியோவும்
வீடியோவும் ரெக்கார்ட் செய்து கொண்டேன்
என்னை பார்த்து சொன்னார். "நீயெல்லாம் என்ன மனிதன்?.
எருமை மாடு மாதிரி...உன்னை அடித்தால் எவன் கேட்பான்
நாய்போல அடிச்சு ரோட்ல தூக்கிப்போட்டுருவேன்
பேஸ்புக்ல எழுதிட்டா
நீ என்ட்ட பணம் திருப்பி வாங்கிடுவியா? மயிறுதான் வரும்
எப் ஐ ஆர் போட்டா
என்ன ஒரு மயிறும்
செய்யமுடியாது...
என்று என்னை கோபப்படுத்த என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்தார்...
அழகிரியின் கார் ஓட்டுனர்
தம்பி சுதாகர் ஏதோ கலவரம் நடக்கப்போகிறது
என்ற பதைபதைப்பில் போர்டிகோவில் நின்றவர்
வேகவேகமாக கண்டும் காணாதது போல நகர்ந்து போனார்...அதுவும் வீடியோவில் இருக்கிறது.
கொஞ்ச மாவது சூடு சொரணை இருக்கிறதா?
உன்னை மாநில பொதுச்செயலாளராக்கிய அழகிரிக்கு நீ அவர் காலடியில் நிற்கும் நாய்போல நன்றியோடு இருக்கவேண்டும்
கொஞ்சம் கூட நன்றி இல்லையே...என்றவர் எதாவது பதில் சொல்லிப்பாரு என்று சுற்றியிருந்த அவரின் ஆட்களுக்கு இது செத்தபாம்பு என்று சொல்லி சமிக்ஞை செய்து மீண்டும் மீண்டும் கடிந்து கொண்டார்.
அப்போது போர்டிகோ அருகில் இருந்த என் உறவினரும் நண்பருமான
சென்னை மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் "இவர் என்ன இப்படி அவமானப் படுத்துகிறார். இதை சும்மா விடக் கூடாது" என்று குமுறினார்
அந்த நிமிடத்திலிருந்து நான் பவனைவிட்டு வெளியேவரும்வரை அவர் ஒரு மெய்க்காவலர் போல என் அருகாமையிலேயே
இருந்தார்....
அவர் எட்டத்தில் இருந்தாலும் அவர் பார்வை என் கிட்டத்திலேயே இருந்தது.
((இது நடந்து ஓரிரு நாட்களில் அவர் மனம் பாதித்து உடல் பாதித்து
உயிரையும் விட்டுவிட்டார்.
நினைக்கும்போதே நெஞ்சு பதறுகிறது...))
நான் கோபப்படவில்லை
அமைதியாகவே நடந்து கடந்தேன். எதிர் வார்த்தையாக என்ன சொல்லியிருந்தாலும் அசிங்கப்படுத்த ஒரு அடியாள் கூட்டம் என்னை சுற்றி குழுமியிருந்தது.
ஆனால் நான் ரஞ்சன்குமார் என்ற அந்த அடியாள் சொன்ன எல்லாவற்றையும்
கடவுள் அவன்மூலம் எனக்குத்தந்த வாக்குத் தத்தமாக எடுத்துக் கொண்டேன்.
எருமை மாடு மாதிரி வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்கின்ற செய்தி எனக்கு தரப் பட்டதாக எண்ணிக் கொண்டேன்.
இன்று வரை எருமை மாடு போல் வாழ என்னை தயார் செய்து கொண்டே இருக்கிறேன்.
எந்த பீடை பற்றியும் சட்டை செய்யாமல் எதனாலும் பாதிக்க படாமல் வாழ்வதற்கு அது மிகவும் உதவுகிறது.
அவர் என்னை அர்ச்சனை செய்யும் அஷ்டோத்திர வீடியோவை அழகிரிக்கும் கோபண்ணாவுக்கும் அனுப்பி வைத்தேன்.
பதிலில்லை!
ஆனால் பார்த்து மகிழ்ந்திருப்பார்கள்...
கொடூர சாடிஸ்ட்கள்!
திருச்சி வேலுச்சாமி சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது....
முடிவு சுபமாக இருப்பதே
சுத்தவான்களுக்கு சுகிக்கும்!
நமது வாழ்க்கை வளர்ச்சி பெறுவதற்கு இந்த மாதிரி அர்ச்சனைகள் வசவுகள் திட்டுக்கள் வாசகங்கள் சம்பவங்கள் அவ்வப்போது நமக்கு தரப் படுகின்றன.
அதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் தவறாக புரிந்து கொண்டு நம்மை கேவலப் படுத்தி விட்டார்கள் என்று புலம்புவது நமது வளர்ச்சிக்கு தடையாகி விடும்.
நாம் சந்திக்கும் எல்லோருமே அவர்கள் நல்லவரோ கெட்டவரோ வேண்டியவரோ வேண்டாதவரோ எல்லோருமே நமக்கு ஆசிரியர்கள் தான்
ஆசிரியர் சொல்வதை கவனமாக செவிமடுத்தால் தான் அவர் என்ன சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
நம் கவனம் பாடத்தில் இல்லாமல் வெளியே இருந்தால் நாம் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. நாம் அதை படித்து தேறாவிட்டால் நமது காலம் விரயமாகி விடும்.
உண்மையை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது.அதை சரியாக உபயோகிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
நாம் இளமை,வாலிபம், முதுமை என்று எல்லா பருவங்களையும் கடந்து தான் செல்ல வேண்டும்.இறுதியில் மரணம் நிச்சயம்.
எல்லாம் அதுஅது வர வேண்டிய காலத்தில் தானாகவே வரும். காலம் வரும் வரை பொறுமை காக்க வேண்டியது முக்கியம்.
அப்படியானால் எதுவுமே செய்ய வேண்டாமா? என்கின்ற கேள்வி அநேகம் பேரிடம் இருக்கிறது.
நமது ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெரியவர்கள் ஏன் நம்மை எதிர்ப்பவர்கள் என எல்லோருமே நாம் நன்கு கற்று நம்மை உயர்திக் கொள்ள வேண்டியே அனைத்தும் செய்கிறார்கள்.
அதை புரிந்து கொண்டு நம்மை மாற்றிக் கொண்டால் போதும்,!.
மீண்டும் ஒருமுறை தலைப்பிற்கு வாருங்கள்
எதுவும் கடந்து போகும்
நடப்பதெல்லாம் நன்மைக்கே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...