*"என் காலத்தில் எனக்கு தெரிந்த தலைவர்களில் எனக்கு உடன்பாடில்லாத ஒரு தலைவருக்காக முதன் முறையாக என்னை மீறி அழுது கொண்டிருக்கின்றேன்.*
*இத்தனைக்கும் அவர் எனக்குப் பிடித்த தலைவர் இல்லை தான்.அப்படியிருந்தும் மனம் கசிகிறது.*
*ஆனால் அவர் ஒரு பெண், தனித்து நின்று அரசியலில் வென்று காட்டியவர். எதிரிகளை தயவு தாட்சண்யமின்றி பந்தாடியவர்.*
*தனது பிடிவாத குணத்தையும், நினைத்ததை செய்வதை யாருக்காகவும் தளர்த்திக் கொள்ளாதவர். இந்த குணங்கள் அவரிடம் இல்லாதிருந்தால் ஒருவேளை எனக்கும் அவர் பிடித்த தலைவராக இருந்திருக்கலாம். ஆனால் ...*
*அந்த குணங்கள் அவரிடம் இல்லாதிருந்தால் அரசியலில் இருந்து அவரை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள். அவரைப் பாராட்டவோ, பரிகசிக்கவோ பல விஷயங்கள் நம்மிடம் இருக்கலாம். அதையெல்லாம் மீறிய ஒரு பரிவு அவர்மீது ஏற்படுகிறதென்றால் ... அது எதனால் ஏற்படுகிறதென்று விளக்கம் சொல்லத் தெரியவில்லை.*
*நம்மோடு இத்தனை காலம் வாழ்ந்த ஒரு பெண்மணி மிகுந்த அவஸ்தைகளோடு, அரசியலோடும் சொல்லப்படாத ரகசியங்களோடு, மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலும் தன்னை நேசிக்கும் மக்களை கடைசியாக பார்க்க முடியாமல், அவர்களுக்கு எந்த செய்தியும் சொல்ல முடியாமல் போராடி மரணமடைந்தது மிகுந்த துயரத்தை தருகிறது.*
*அவருக்கு எது நல்லதோ அதை இறைவன் வழங்கட்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை."*
*-முகஸ்டாலின்*
No comments:
Post a Comment