Sunday, December 4, 2022

இந்த பொருட்கள் எல்லாம் உங்கள் வீட்டு பீரோவில் இருந்தால் உடனடியாக அதை முதலில் தூக்கி வெளியே போட்டு விடுங்கள். இவை அனைத்தும் வறுமை தரித்திரத்தை கொடுக்கக்கூடிய பொருட்கள் தான்.

 நிறைய பேர் வீடுகளில் வறுமை, கஷ்டம், தரித்திரம், பணம் காசு கையில் இல்லை, கடன் தொல்லை, இந்த பிரச்சனைகள் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பீரோவில் நாம் வைக்கக்கூடிய இந்த பொருட்கள் கூட நமக்கு கஷ்டத்தை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பொருட்கள் எல்லாம் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த மாதிரி பொருட்கள் உங்கள் வீட்டு பீரோவில் இருந்தாலும் சரி, உங்கள் வீட்டில் மற்ற இடங்களில் இருந்தாலும் சரி, முதலில் அதை அப்புறப்படுத்தும் வேலையை பாருங்கள். சில பேர் கிழிந்த துணியை பத்திரமாக பீரோவில் வைத்திருப்பார்கள். வாங்கிய புது புடவை, புது சட்டை, புது சுடிதார், என்று ஓரிரு முறைதான் பயன்படுத்தி இருப்போம். ஏதோ ஒரு காரணத்தால் அது ஆணியில் மாட்டியோ அல்லது நெருப்பு பட்டோ எப்படியோ ஒரு விதத்தில் கிழிந்திருக்கும். நிறைய காசு கொடுத்து வாங்கி விட்டோம். டேமேஜும் ஆகிவிட்டது. தூக்கி போட மனசு இல்லை பத்திரமாக எடுத்து வைத்திருப்பார்கள். புத்தம் புது ஆடை கிழிகிறது என்றால் உங்களுக்கு வந்த கண் திருஷ்டியோ, எதிர்மறை ஆற்றலோ, அந்த ஆடையை தாக்கியிருக்கிறது. அந்த ஆடை உங்களுக்கு ராசி இல்லை என்று தான் அர்த்தம். அப்படிப்பட்ட ஆடையை தூக்கிப் போட மனதில்லாமல் பீரோவுக்குள் வைத்து பாதுகாக்கக் கூடாது. உடனே அதை தூக்கி குப்பையில் போட்டு விட வேண்டும்.  அடுத்தபடியாக நிறைய பேர் சென்டிமென்ட் ஆக ரொம்ப ரொம்ப பழைய ஆடைகளை பீரோவில் வைத்திருப்பார்கள். அம்மாவுடைய புடவை, இது என்னுடைய பாட்டியோட புடவை, அல்லது தாத்தா அணிந்திருந்த ஆடை அல்லது அப்பா, தாத்தா போட்டிருந்த கண்ணாடி, வாட்ச் அவர் பயன்படுத்திய வேறு ஏதாவது பொருட்கள் என்று பீரோவில் இருக்கும். இப்படி இறந்தவர்களுடைய பழைய பொருட்களை நம் வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விடுவது ரொம்பவும் நல்லதொரு விஷயம். குறிப்பாக மூன்று தலைமுறைகளை நாம் கடந்து வந்து விட்டோம். நாலாவது தலைமுறைக்கு ஒரு பேரப்பிள்ளை நம் வீட்டில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். மூன்று தலைமுறைக்கு முன்பு நம் முன்னோர்கள் பயன்படுத்திய, எந்த பொருட்களும் நம் வீட்டில் இருக்கக் கூடாது. அது எதிர்மறை அதிர்வுகளை தான் நமக்கு கொடுக்கும். தங்கத்தால் செய்யப்பட்ட, வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்கள் இருந்தால் கூட, மூன்று தலைமுறைக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பொருட்களை கடையில் கொடுத்து மாற்றி விடுங்கள். அவ்வளவு பழைய பொருள் வீட்டில் இருந்தால் அதன் மூலம் நிச்சயமாக ஏதாவது ஒரு எதிர்மறை ஆற்றலை அது வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். சில பேர் திருமணத்திற்காக எடுத்த பட்டுப்புடவை பட்டு வேட்டியை மிக மிக பத்திரப்படுத்தி எடுத்து வைத்திருப்பார்கள். அதில் சரிகை கருத்து போய், ரொம்பவும் மங்கிப்போய் கிடக்கும். கையில் எடுத்தாலே துணி கிழியும். இப்படிப்பட்ட பொருட்களை ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வது தவறு கிடையாது. இருப்பினும் பயன்படுத்தவே முடியாமல் இத்து போய் இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஒரு பொருளை பத்திரப்படுத்தி அதை பீரோவில் வைப்பதும் எதிர்மறை ஆற்றலை தான் உண்டு பண்ணும். கூடுமானவரை அதையும் அப்புறப்படுத்துவது நல்லது. காரணம் பல வருடமாக பயன்படுத்தாத ஒரு துணியில் எவ்வளவோ எதிர்மறை ஆற்றல் இருக்கும். அதன் மூலம் நமக்கு நிச்சயமாக நன்மை நடக்கப்போவது கிடையாது. அதையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். ரொம்ப காலமாக பயன்படுத்தாத இரும்பு பொருள் எதுவுமே உங்களுடைய வீட்டில் துருப்பிடித்து போய் அட்டாணியில் கூட கிடக்க கூடாது. அதை எடுத்து எடைக்கு போட்டு விடுங்கள். அம்மிக்கல் ஆட்டுக்கல் இவைகளை எல்லாம் பயன்படுத்தாமல் இருந்தாலும் வீட்டு மூலையில் போட்டு வைக்கலாம் என்று சொல்லுவார்கள். பெரிய பெரிய பாரமான பொருட்களை பயன்படுத்தாமல், நகர்தாமல் அப்படியே வீட்டு மூலையில் போட்டு வைக்கக் கூடாது. உங்களுக்கு அம்மிக்கல் ஆட்டுக்கல் வேண்டும் என்றால் சிறிய அளவில் விற்கிறது. அதை வாங்கி வீட்டில் வைத்து பயன்படுத்துங்கள். பயன்படுத்தாத எந்த பொருளாக இருந்தாலும் அதை நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் போட்டு வைக்கும் போது அதனுடைய கெட்ட அதிர்வலைகள் நம் குடும்பத்திற்கு தரித்திரத்தை உண்டு பண்ணிவிடும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...