நீதிபதிகள் IAS, IPS போன்று IJS தேர்வு மிகக் கடுமையான பயிற்சிக்குப் பின் நேரடியாக நீதிபதிகளாக நியமிக்கப் பட வேண்டும்.
வக்கீல் தொழில் செய்யும் போது, மிக ஒரு சிலர் தவிர, பெருவாரியான வக்கீல்கள் போலீஸுக்கு லஞ்சம் கொடுப்பது, நிதிமன்றத்தில் நீதிபதி முதல் கோர்ட் கிளர்க் வரை லஞ்சம் வழங்குதல், போலி ஆவணங்கள் தயாரித்தல், போலியான வாதங்களை முன் வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகிறது.
பின்பு, அவர்களே நீதிபதிகளாக நியமனம் பெறும் போது 'பழைய வாடிக்கையாளர்கள்' சில சலுகைகளை எதிர்பார்ப்பதை தவிர்க்க இயலாது.
மேலும், வழக்கறிஞர், வழக்குரைஞர்களின் பணி வேறாகவும், நீதிபதி, மாஜிஸ்ட்ரேட், நடுவர்களின் பணி வேறானதாகவும் இருப்பதால், இவ்விரண்டையும் வெவ்வேறு பாடத்திட்டம், பயிற்சி திட்டங்களின் கீழ் கொண்டு வருவதே சிறந்தது.
எப்படி Defence Academy செயல்படுகிறதோ, அதே போன்று Judicial Academy தனியாக உருவாக்கப் பட வேண்டும்.
நீதித்துறையை மொத்தமாக மாற்றி அமைக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது.
No comments:
Post a Comment