நேற்று மாலை தந்தி டிவியில் பாஜக வின் குஜராத் வெற்றியை பற்றி குஜராத்தில் உள்ள தமிழ் பெண்மணியிடம் பேட்டி எடுத்தார் ஹரிஹரன். எவ்வளவு பேர் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. அந்த பெண்மணி ஒரு கிறிஸ்துவர். ஐக்கியநாடுகள் சபையின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கிறார்.
பேட்டியில் 27 வருஷமா ஒரே கட்சி ஆட்சியில் இருக்கே உங்களுக்கு போர் அடிக்கலயா? என்று கேட்கிறார்.
அதற்கு அந்த பெண்மணி, மோடி குஜராத்தின் தலைவராக வருவதற்கு முன்பு இருந்த குஜராத்தை பார்த்திருக்கிறீர்களா? அவர் முதலமைச்சரான பிறகு இன்று வரை இந்த மாநிலத்தின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இயங்கி கொண்டிருக்கிறது பாஜக. நாங்கள் எதற்காக வேறு கட்சிக்கு வாக்களிக்கவேண்டும். வளர்ச்சியை பார்ப்பது போர் அடித்தால் நம் தலையில் நாமே மண்ணள்ளி போட்டுக்கொள்வதற்கு சமம். இதைத் தாண்டி *குஜராத் மிகவும் அமைதியாக இருக்கிறது. எந்த கலவரங்களும் இல்லை.* பாஜகவின் மக்கள் நல திட்டங்கள் எல்லா மக்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. வேறு ஒரு கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்ற எண்ணமே தமிழர்கள் உட்பட இங்குள்ள பெரும்பாலான மக்களுக்கு எழவே இல்லை. என்று கூறினார்.
அடுத்து ஹரிஹரன் ஆம் ஆத்மி கட்சி வரும் நாட்களில் பாஜகவிற்கு மாற்றாக அங்கு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு அந்த பெண்மணி,
ஆம் ஆத்மி கட்சி பல இலவசங்களை அறிவித்தது. அதை கொண்டு வாக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் பொதுவாகவே *குஜராத்திகள்* இங்குள்ள தமிழர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன், *உழைத்து வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள். இலவசத்தை விரும்பாதவர்கள். அவர்களை பொறுத்தவரை, அரசு உழைப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்* என்று எண்ணுபவர்கள். அதை இந்த அரசு நன்றாகவே செய்கிறது. அதனால் எவ்வளவு காலமானாலும் ஆம் ஆத்மி கட்சி பாஜகவிற்கு மாற்றாக வர முடியாது
என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்.
----------------------------------------
*இதுதான் குஜராத் மாடல்.* இதை தான் மோடி இந்தியா முழுவதிலும் கொண்டுவர பாடுபடுகிறார்.
*தமிழக மக்களும் உழைப்பால் உயரவேண்டும்* என்று விரும்பும்போது *தானாக இந்த மாற்றம் தமிழகத்திலும் ஏற்படும்* என்றார்.
No comments:
Post a Comment