குஜராத்ல தமிழர்கள் வாழும் பகுதி தனியாவே இருக்கு...
சீப்பு செந்தில் சொன்ன மாதிரி அவங்க நினச்சா சில தொகுதிகள்ல வெற்றிய மாத்த முடியும்...
எல்லாம் கலெக்டர் டாக்டர் இல்ல... நடுத்தர வர்கத்துல இங்க இருந்து அங்க பிழைக்க போனவங்க.. பல வருசமா அங்க இருகாங்க...
இதே மாதிரி கர்நாடகா, ஆந்திரானு எல்லா மாநிலங்கள்லயும் தமிழர்கள் வாழும் பகுதி ஒரு தொகுதி அளவுக்கு இருக்கும்..
பல லட்சம் தமிழர்கள் தமிழ்நாட்ட தாண்டி வாழுறாங்க... அதே நேரம் அவங்க எல்லாம் கூலி வேலை முதல் நடுத்தர வேலை செய்றவங்க தான் 97% பேரு வாழுறாங்க...
இவங்க எல்லாருக்குமே ஓட்டுரிமை குடுத்துருக்கு அந்த மாநிலங்களும் அங்க இருக்குற கட்சிகளும்... . ஆனா.. இங்க இருக்குற திராவிடியா & நாய் டம்ளர் கட்சி மாதிரி ஆட்கள் என்னமோ தமிழ்நாடு சொர்கபுரி மாதிரியும், வடக்கனுக மட்டும் தான் இங்க வந்து வாழுற மாதிரியும் பேசுறானுக..
சைமன் செபாஸ்டியன் கூட நேத்து சொல்றாப்ல... இங்க வரட்டும் வாழட்டும் ஆனா ஓட்டு உரிமைய குடுக்காதீங்கனு...
சரி.. இதே மாதிரி மத்த மாநிலங்கள்லயும் அந்த மாநில அரசு சொன்னா மூடிட்டு இருபீங்களா..??
எல்லா மாநிலத்துலயும் அடிமட்ட மக்கள் வாழ தான் செய்வாங்க.. மேலோட்டமா தஞ்சை, திருச்சி, சென்னைனு பாத்துட்டு மக்கள் பணத்தோட இருகாங்க.. முன்னேரிடாங்கனு சொல்ல கூடாது..
தூத்துகுடி, சிவகாசி, தர்மபுரி மாதிரி மாவட்டத்துல வாழுற கடைசி கிராமத்துல வாழுற மக்களோட வாழ்கை முறை எப்புடி இருக்குனு தெரியுமா..??
அவங்கலாம் முன்னேரிடாங்களா..? தேன் மிட்டாய் கூட குடுக்க மாட்டேன்னு சொல்ற சாதிய ஒடுக்குமுறைல இருந்து கல் குவாறில, உப்பலத்துலனு கொத்தடிமையா போவுற நிலமைல இன்னும் எத்தனை லட்சம் தமிழர்கள் இருக்காங்க..??
அதே மாதிரி தான அடுத்த மாநிலத்துலயும்..? முன்னேர முடியாத ஊர்கள்ல இருக்குறவங்க பசிக்கு வேலை செய்ய வராங்க...
பசிக்கு திருடாம, தங்கம் கடத்தாம, தீவிரவாதம் பன்னாம, பிச்சை எடுக்காம வேலை செஞ்சி பொளைக்கனும்னு சொந்தம், பந்தம், சாதி சனத்த விட்டுட்டு ஊர தாண்டி போற யாரையுமே, எந்த மாநிலத்தவரையுமே குத்தம் குறை சொல்லாதீங்க...
நமக்கு கிடைக்கிற சில சந்தோசம், சுகம் கூட அவங்களுக்கு கிடைக்கிறது இல்ல...
சும்மா வடக்கன், தெலுங்கன், கன்னடன்னு பேசிட்டு இருகாதீங்க...
இன்னொரு விஷயம்... அவங்க வரது எல்லாம் சின்ன சின்ன வேலை, கூலி வேலைகளுக்கு...தான..? ஏன் அந்த வேலைகள நம்ம ஆளுக செய்ய முடியல..? ஏன் செய்ய ஆளுக இல்ல..?
கிட்டதட்ட கிராமத்துல விவசாய வேலை வரைக்கும் அடுத்த மாநில காரங்க வந்துடாங்க.. ஏன் விவசாயம் செய்ய தமிழர்கள் வரல..?
முதல்ல டாஸ்மாக், கஞ்சா, சினிமானு மடைமாறி கிடக்குற இன்றைய தலைமுறைய உழைக்குற மாதிரி மாத்துங்க... . தமிழர்கள் தான் உலகுக்கே முன்னோடினு நாம பீத்திகனும்னா முன்னோடியா வாழனும்..
நாமளே எல்லா வேலையும் செய்ய தொடங்கி ஒழுக்கமா வாழ்ந்துட்டா அடுத்தவன் ஏன் நம்ம மாநிலத்துக்கு வரபோறான்.??
மாறவேண்டியது நாம தான்...
No comments:
Post a Comment