குடும்பத்தைத் தவிர ஒரு தனி நபருக்கு Z plus securityயால் கூட பாதுகாப்பு தர முடியாது என்பது நிரூபணமான நாள் இன்று .
ஏன் இந்தியாவிற்கே என்று போற்றப்பட்ட புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மையார் போன்று யாரும் பிறந்ததில்லை இனி பிறக்கப் போவதுமில்லை .
அப்படிப்பட்ட ஆளுமை, அழகு, புத்தி சாத்துர்யம் , பன்முகத்திறமை, பன்மொழிப் புலமை
என அனைத்தையும் வாரி வாரி கொடுத்த கடவுள்,
அருமையான
ஒரு இணையை துணையாக தராததால்அவரது வாழ்க்கையே வினையாகி போனது.
ஆண் பெண் யார் ஆகிலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை தான்
தாய் தந்தை மற்றும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் நிழலில் வசிக்க முடியும் ..
அதன்பின் அவர்களுக்கான ஒரு குடும்பம் இருந்தே தீர வேண்டும்.
அதுதான் வாழ்க்கையின் மீதான பிடிப்பை கொடுக்கும் பாதுகாப்பையும் கொடுக்கும்.
அம்மாதிரி ஒரு குடும்பம் தனக்கென அமையாததால் தான் கடைசி காலத்தில் தன் சொந்த இல்லத்திலேயே அகதியாய் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார் அம்மையார்.
சித்தாந்த ரீதியாக மட்டுமல்ல, பல முடிவுகளை அவர் கையாண்ட விதங்களை இன்று வரை என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை என்றாலும் அதை எல்லாம் சுயமாக எடுத்திருப்பாரா அல்லது நிர்பந்திக்கப்பட்டு இருப்பாரா என்று கூட எண்ணுவது உண்டு .
பல கோடி மக்களுக்கு வாய்க்காத வாழ்க்கை அவருக்கு வாய்த்தது.
என்னைப் பொருத்தமட்டில் வெளிப்பார்வைக்கு அனைவரும் கண்டு வியக்கும் சக்சஸ்ஃபுல்(Success) வாழ்க்கை தான் வாழ்ந்திருக்கிறார், மகிழ்ச்சியான தருணங்களை, வாழ்வின் இனிமைகளை
நினைத்து நினைத்து பார்த்து அனுபவித்து, பூரித்துப் போகும் சேட்டிஸ்ஃபைடு(satisfied) வாழ்க்கை அவர் வாழவில்லை .
இன்று காதல் கல்யாணம் அனைத்தையும் கேலிக்கூத்தாக மாற்றிக் கொண்டிருக்கும் சமுதாயம் ஒன்றே ஒன்றை மட்டும் அவர் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
திருமணம் இளமைக்கானது அல்ல வாழ்க்கை முழுமைக்கானது என்று.
உனக்காக நான் இருக்கிறேன் என் நிலையிலும்.... என்று கூறும் துணை மட்டும் கிடைத்துவிட்டால்
வாழும் வாழ்க்கை அர்த்தமாகிவிடும்
ஆத்மார்த்தமாகி விடும்.
கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்று கூற கூட ஆளில்லாமல்,
இப்படி இறந்திருக்கலாம் அப்படி இறந்திருக்கலாம் இறந்த தேதி இதுவா அதுவா (Official ஆக அறிவிக்கப்பட்டிருந்தாலும்) என கண்டறிய கமிஷன் அமைத்து, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அவர் மரணத்தில் இருக்கும் மர்மம் விலகிய பாடில்லை.
எத்தனையோ பெண் தலைவர்கள்
திருமதி சுஷ்மா ஸ்வராஜ், திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன், திருமதி நிர்மலா சீதாராம் போன்றோர் இந்தியாவில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கான குடும்பம் இருக்கிறது.
ஆனால் அவர்களைக் காட்டிலும் பல மடங்கு சக்தி வாய்ந்த பெண்மணிக்கு குடும்பம் என்ற ஒன்று இல்லாத காரணத்தால் தான் இந்த
வருத்தத்துக்குரிய நிலையே.
அவர் விரும்பியது ஒன்று நடந்தது ஒன்றாகத்தான் அவர் வாழ்க்கை இருந்து இருக்கிறது.
எது எப்படியோ , பிறந்ததில் இருந்து நிம்மதி என்ற ஒன்றில்லாமல்
அலை கழிக்கப்பட்ட அந்த ஜீவாத்மா
எல்லாம் வல்ல பரமாத்மாவுடன் கலந்து
இளைப்பாற கடவுளை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி
Miss you amma....
No comments:
Post a Comment