கமல்ஹாசன் அவர்கள் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்த படம், படத்திற்கு கதை, வசனம் k. பாக்கியராஜ் அவர்கள்.
படிப்பறிவு இல்லாமல் அரசியல் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து தன் அரசியல் தலைவனே உலகம் என்று வாழ்ந்து கொண்டு இருப்பவன் டேவிட், அவன் வாழ்க்கையில் வருகிறாள் ரோசி, டேவிட்டுக்கு கல்வி கற்றுக் கொடுத்து புது மனுஷனாக மாற்றுகிறாள் ரோசி,இருவருக்கும் குழந்தை பிறக்கிறது ,தன் தலைவன் தான் குழந்தைக்கு பேர் வைக்க வேண்டும் என்று ரோசி மற்றும் குழந்தையோடு செல்கிறான் டேவிட்.
தலைவனின் கண் தொண்டனின் மனைவி மீது படுகிறது சூழ்ச்சி செய்து ரயில் மறியல் போராட்டத்தில் டேவிட் சிறைக்கு செல்கிறான் ,தன் கணவரை மீட்க தலைவனை நோக்கி ஓடுகிறாள்
ரோசி, கிழிந்த நாராக வீட்டுக்கு வருகிறாள்.
டேவிட் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ந்து போகிறான் ரோசி தற்கொலை செய்து கொள்கிறாள் அவள் கையில் இருக்கும் கடிதத்தில் இதற்கு காரணம் அரசியல் தலைவர் என்று எழுதிவிட்டு இறந்துவிடுகிறாள்.
நியாயம் கேட்டு டேவிட் செல்கிறான் அங்கு அவன் குற்றவாளியாக்கப்பட்டு சிறைக்கு செல்கிறான் போகும் முன் தன் குழந்தையை சாராய வியாபாரி வேலப்பனிடம் தன் குழந்தையை ரவுடியாக வளர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு செல்கிறான்.
22 வருடம் கழித்து டேவிட் விடுதலை பெற்று வருகிறான் தன் மகனுடன் சேர்ந்து தன் மனைவியின் சாவுக்கு காரணமாக இருந்த மூன்று நபர்களை வேட்டையாட பழிக்கு பழி தீர்க்க வெளியே வருகிறான்.
வேலப்பனிடம் தன் மகன் எங்கே என்று கேட்கிறார், அவன் இப்போது ஒரு போலீஸ் அதிகாரி என்று சொல்கிறான் வேலப்பன், டேவிட் அதிர்ந்து போகிறான்
அனைவரும் கைவிட்ட நிலையில் டேவிட் தனி ஆளாக பழிதீர்க்க நினைக்கிறார், மறுபக்கம் மகன் இந்த மிருகங்களை காப்பாற்ற நினைக்கிறார் இந்த வேட்டையில் யார் வென்றார்கள் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அப்பா டேவிட் கதாபாத்திரம் அட்டகாசம்
தன் மகனை வேலப்பன் வீட்டு வாசலில் இருந்து எட்டி எட்டி பார்க்கும் போது அதற்கு இளையராஜா அவர்கள் ஒரு தாலாட்டு இசையை வாசித்து இருப்பார் பாருங்கள் கலங்காமல் இருக்க முடியாது.
தன் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு இருக்கும் போது ஒரு தந்தையின் தவிப்பை கண் முன்னே கொண்டு வந்து இருப்பார் கமல்ஹாசன் அவர்கள்.
இளையராஜா அவர்களின் இசை படத்திற்கு பெரிய பலம் அப்பா, மகன் இருவரும் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் ஒரு குழந்தையின் அழுகை சத்தத்தை போட்டு அதன் நடுவே அந்த தாலாட்டு இசையை ஒலிக்க செய்து Bgm தெரிக்கவிட்டு இருப்பார் இளையராஜா அவர்கள்.
முதல் முறை கிளைமாக்ஸ் காட்சியை பார்பவர்களுக்கு நிச்சயம் அப்படி ஒரு காட்சியை எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.
மகன் கமல் துப்பாக்கியை எடுத்து தைரியமாக எந்த தயக்கமும் இல்லாமல் சுடும் போது அப்பா கமல், My son என்று மைக்கில் அழைக்கும் போது மகன் கமல் செய்வது அறியாமல் கலங்கி போய் அப்படியே நின்று விடுவார் கமல்ஹாசன் அவர்களை தவிர வேறு யாராலும் இப்படி ஒரு காட்சியில் நடித்து இருக்கவே முடியாது.
படத்தின் வசனங்கள் அட்டகாசமாக இருக்கும்
அந்த பூ நாகம் கதை முடிந்தவுடன் டாக்டரிடம் ,கேட்கிற மூடுல நீ இல்லைனாலும், சொல்ற மூடுல நா இருக்கேனே போன்ற வசனங்கள் நச்.
பாரதிராஜா அவர்கள் பல கிராமிய படங்களை இயக்கி வெற்றி பெற்ற நிலையில் அவரின் இயக்கத்தில் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக மிக பெரிய வெற்றி பெற்றது, பிறகு கமல்ஹாசன் & பாரதிராஜா அவர்கள் மீண்டும் இணைந்து மிக பெரிய வெற்றியை இந்த படத்தின் மூலம் அளித்தனர் 1985 ல் இரண்டு படங்கள் இவர் இயக்கத்தில் வெளிவந்தது ஒன்று, ஒரு கைதியின் டைரி மற்றொன்று காலத்தால் அழியாத முதல் மரியாதை.
ஒரு கைதியின் டைரி இந்தி பதிப்பை பாக்கியராஜ் அவர்கள் அமிதாப்பச்சன் அவர்களை வைத்து ஆக்ரிரஸ்தா என்று எடுத்தார் இதில் என்ன ஒரு துணிச்சல் என்றால் தமிழில் மிகவும் பரபரப்பாக பேசபட்ட கிளைமாக்ஸை தூக்கி விட்டு இவர் வேறு ஒரு கிளைமாக்ஸ் வைத்து வெற்றி பெற்றார்.
இந்தியில் அப்பா, மகன் பேசிக்கொள்ளும் உரையாடல் காட்சிகள் அற்புதமாக இருக்கும்.
அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
No comments:
Post a Comment