ஒரு பெண்ணினுடைய திருமாங்கல்யம் இப்படி இருந்தால், கணவனால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற முடியாது.
திருமணமான பின்பு ஒரு ஆணினுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முழு காரணமாக இருப்பது அவனுடைய மனைவியும், மனைவி அணிந்து இருக்கக்கூடிய மாங்கல்யமும் தான். கணவனின் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய, குடும்ப பாரம்பரியத்தை காக்க கூடிய அந்த திருமாங்கல்யத்தை ஒரு பெண்கள் எப்படி தினம் தோறும் பராமரிக்க வேண்டும், எந்தெந்த தவறுகளை எல்லாம் திருமாங்கல்யத்தில் செய்யவே கூடாது என்பதை பற்றி சில சாஸ்திர ரீதியான விஷயங்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தினமும் பெண்கள் காலையில் குளிக்கும் போது கட்டாயமாக திருமாங்கல்யத்திற்கு மஞ்சள் தேய்த்துக் குளிக்க வேண்டும். திருமாங்கல்ய சரடு தங்கத்தில் அணிந்திருந்தாலும், திருமாங்கல்ய குண்டுகளை கோர்த்து வைத்திருக்கும் மஞ்சள் கயிறுக்கு மஞ்சள் பூசி குளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். குளித்து முடித்து விட்டு, பெண்களின் நெற்றியிலும் வகுட்டிலும் குங்குமம் வைப்பது போல, தங்களுடைய திருமாங்கல்யத்திற்க்கும் குங்குமத்தை இட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக ஒரு முக்கியமான விஷயம். இது சிலபேருக்கு தெரிந்திருக்கும். சில பேருக்கு தெரிந்திருக்காது. சுமங்கலிப் பெண்கள் தங்களுக்கு யாராவது பூ கொடுத்தால் அதை வாங்கி முதலில் தங்களுடைய தலையில் சூடிக் கொள்வார்கள். ஆனால் இப்படி சுமங்கலிப்பெண்கள் பூவை வாங்கி தங்களுடைய தலையில் வைத்துக் கொள்வதற்கு முன்பு, அந்த பூவிலிருந்து கொஞ்சம் எடுத்து அவர்களுடைய திருமாங்கல்யத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அந்த காலத்தில் இது நடைமுறையில் இருந்து வந்த வழக்கம் தான். இன்றைய சூழ்நிலையிலும் சில பேர் இதை கடைபிடித்து வருகிறார்கள். ஆனால் நிறைய பேருக்கு இது தெரியாது. எந்தப் பெண்கள் திருமங்கலத்திற்கு பூ வைத்து, திருமாங்கல்யத்தை போற்றி, திருமாங்கல்யத்தை பயபக்தியோடு, பாதுகாத்து வருகின்றார்களோ அந்தப் பெண்ணினுடைய கணவனின் வாழ்க்கை ஏறுமுகத்தில் செல்லும்.
பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்துடன் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் சேரவே கூடாது. குறிப்பாக நிறைய பெண்கள் பின்னை திருமாங்கல்யத்தில் கோர்த்து வைத்து இருப்பார்கள். புடவைக்கு குத்தும் ஊக்கு என்று சொல்வார்கள் அல்லவா.
அந்த ஊக்கை திருமங்கலத்தில் கோர்த்து வைப்பது குடும்பத்திற்கு அத்தனை நல்லது கிடையாது.
வசதி இல்லாதவர்கள் திருமாங்கல்ய சரடுக்கு பதிலாக கயிறு அணிந்திருப்பார்கள். கயிறுக்கு மேலே கவரிங்கில், சில பெண்கள் சைன் அணியும் வழக்கம் உள்ளது. வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் கவரிங் சரடு கழுத்தில் போட்டு இருந்தாலும், அந்த கவரிங் நகைகளில் கட்டாயமாக இரும்பு கலந்துதான் இருக்கும். ஆகவே வெளியிடங்களுக்கு செல்லும் போது மட்டும் அந்த கவரிங் நகையை திருமாங்கல்யக் கயிறுடன் சேர்த்து அணிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் இருக்கும் சமயத்தில் கவரிங் நகையை திருமாங்கல்யத்தோடு சேர்த்து அணியாமல் இருப்பதே நல்லது.
ஆடம்பர காட்சிப்பொருளாக மற்ற நகையை போல திருமாங்கல்யத்தை வெளியில் தொங்க வைத்துக் கொள்ளக்கூடாது. பொது இடங்களில் மாங்கல்யத்திற்கு குங்குமம் இட்டுக் கொள்வதாக இருந்தாலும் சரி, அதை மறைவான இடத்தில் சென்று தான் இட்டுக்கொள்ள வேண்டும்.
உங்களுடைய கணவனோடு நீங்கள் கோவிலுக்கு சென்றால், உங்களுடைய கணவனின் கையால் கோயிலில் திருமாங்கல்யத்தில் குங்குமத்தை இட்டுக் கொள்ளுங்கள். மூத்தவர்கள் வயதானவர்கள் சுமங்கலியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உங்களுடைய நெற்றியில் திலகத்தை இட்டால், உடனே அவர்களிடத்தில் உங்களுடைய திருமாங்கல்யத்தை காண்பித்து, திருமங்கலத்திற்க்கும் இட்டு விட சொல்ல வேண்டும். இப்படி செய்வது உங்களுடைய மாங்கல்ய பலத்தை அதிகரிக்கும். உங்களுடைய கணவனுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இது உறுதுணை புரியும்.
எந்த பெண் தன்னுடைய திருமாங்கல்யத்தை, தன் வணங்கும் கடவுளுக்கு இணையாக மதித்து, திருமாங்கல்யத்திற்க்கு கொடுக்கவேண்டிய சிறப்பினைக் கொடுத்து மாங்கல்யத்தை பராமரித்து வருகின்றாளோ, அந்தப் பெண்ணினுடைய கணவனின் வாழ்க்கை மேலோங்கும். கணவனின் முன்னேற்றம் தடைப்படாது.
எந்த பெண் தன்னுடைய திருமாங்கல்யத்தை பராமரிக்காமல், மாங்கல்யத்திற்க்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல், மாங்கல்யமும் சாதாரண அணிகலனை போல, கழுத்தில் அணிந்து கொண்டிருந்தால், அந்த வீட்டில் ஐஸ்வர்யம் குறையும்*.
No comments:
Post a Comment