இந்த 2 செடிகளை வீட்டில் ஒன்றாக நட்டு வைத்து வளர்தால் போதும். உங்கள் அடுத்தடுத்த சந்ததிக்கு கூட கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்பதே இருக்காது.
*நான் மட்டும் கணவன் மனைவியாக தம்பதி சரீரமாக ஒன்றாக வாழ்ந்து முடித்து விட்டால் போதுமா. நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினர்கள், நம்மைப் போல கணவன் மனைவியாக ஒற்றுமையாக வாழ வேண்டும் அல்லவா. அதற்காக ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தற்போது சண்டை சச்சரவோடு இருக்கக்கூடிய கணவன் மனைவியும் இந்த பரிகாரத்தை செய்யலாம். எங்களுக்குள் சண்டை சச்சரவே கிடையாது. எங்களை போல எங்களுக்கு அடுத்து வரக்கூடிய எங்களுடைய தலைமுறைகளும், தம்பதியினராக பிரியாமல் கடைசி வரை வாழ வேண்டும் என்று நினைத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.*
*கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள் என்னென்ன?*
*அந்த இரண்டு செடிகள் என்னென்ன என்பதை முதலில் பார்த்து விடுவோம். பிறகு அதை எப்படி நட்டு வளர்ப்பது என்பதையும் தெரிந்து கொள்வோம். கருந்துளசி செடி, தொட்டா சிணுங்கி செடி, இந்த இரண்டு செடிகள் தான் அவை. இரண்டுமே உங்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடிய செடிகள் தான். கொஞ்சம் ஓரளவுக்கு அகலமாக இருக்கக்கூடிய ஒரே தொட்டியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு செடிகளையும் கொஞ்சம் இடைவெளி விட்டு நட்டு வளர்க்கலாம். உங்களுடைய வீட்டில் மண் பாங்கான இடம் இருக்கிறது என்றால், இரண்டு செடிகளையும் அரை அடி இடைவெளி விட்டு பக்கம் பக்கமாக நட்டு வைத்து, தினமும் தண்ணீர் ஊற்றி வணங்கி வளர்த்து வர வேண்டும்.*
*தினமும் அந்த துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது, எங்கள் குடும்பத்தில் வரக்கூடிய அடுத்தடுத்த தலைமுறைக்கு கூட, கணவன் மனைவிக்குள் சண்டை போட்டுக் கொள்ள கூடாது. கணவன் மனைவி பிரியக்கூடாது. சந்தோஷமாக அன்னியூன்யமாக கடைசி வரை வாழ வேண்டும் என்று வேண்டுதல் வைக்க வேண்டும்.*
*தண்ணீர் ஊற்றும் போது இரண்டு வினாடிகள் இதை நினைத்து, தினமும் தண்ணீர் ஊற்றி, இந்த இரண்டு செடிகளையும் ஒன்றாக வளர்த்து வந்தால், உங்களுடைய குடும்பத்தில் தம்பதியினருக்குள் சண்டை வரும், சச்சரவு வரும், ஆனால், அவர்கள் பிரியாமல் கடைசி வரை சந்தோஷமாக வாழ்வார்கள். சண்டை சச்சரவு இல்லாமல் அந்த கடவுளால் கூட குடும்பம் நடத்த முடியாது அல்லவா. என்ன நடந்தாலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய கூடாது. அதுதான் குடும்பம்.*
*சரி, இப்போது பிரிந்து இருக்கக்கூடிய கணவன் மனைவிக்கு பரிகாரம் பார்ப்போம். அவர்களுக்கும் இதே பரிகாரம் தான். இரண்டு செடிகளை ஒன்றாக நட்டு வீட்டில் வளர்த்து வர வேண்டும். இரண்டு செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றும் போது பிரிந்த என் வாழ்க்கைத் துணையோடு, நான் சேர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். நீங்கள் கணவராக இருந்தால், மனைவியோடு சேர வேண்டும் என்று வேண்டுதல் வையுங்கள். மனைவியாக இருந்தால், கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று வேண்டுதல் வையுங்கள்.*
*உண்மையிலேயே உங்களுக்கு அவர்கள் மீது அன்பும் பாசமும் அக்கறையும், ஆசையும் இருந்தால் இந்த இரண்டு செடி, உங்கள் இரண்டு பேரையும் நிச்சயமாக, 16 நாட்களில் ஒன்று சேர்த்து விடும். சில பேருக்கு நடக்கக்கூடிய கெட்ட நேரம், சூழ்நிலை, நல்லது நடக்காமல் தடுக்கும். விடாதீங்க, தொடர்ந்து தண்ணீர் ஊற்றி இந்த செடியை வணங்குங்கள். நிச்சயம் கூடிய விரைவில் உங்களுக்கு நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.*
No comments:
Post a Comment