Sunday, March 26, 2023

ஹரிஓம் தத்சத் திருநீறு அணியும் முறை.

 வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு,

கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல்
ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும்.
எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம சிவசிவ
என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக்
கொள்ளுதல் வேண்டும்.
ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும்.
காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும்,
ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப்
போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.
அணியும் இடங்கள்
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப்
பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.
அவை
தலை நடுவில் (உச்சி)
நெற்றி
மார்பு
தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
இடது தோள்
வலது தோள்
இடது கையின் நடுவில்
வலது கையின் நடுவில்
இடது மணிக்கட்டு
வலது மணிக்கட்டு
இடது இடுப்பு
வலது இடுப்பு
இடது கால் நடுவில்
வலது கால் நடுவில்
முதுகுக்குக் கீழ்
கழுத்து
பொட்டு
பலன்கள்
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச்
சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.
பாவங்கள் என வரையறுக்கப்
பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும்,
தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல
வழிகாட்டும்.
இதைத் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!
All reacti

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...