இந்த பேங்க் அக்கவுண்ட் மோசடிகளில் ட்ரூகாலர் போன்ற குறுஞ்செய்தி நிர்வாக ஆப்களும் ஒரு பங்கு வகிக்கின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது. விளக்கம் இதோ.
நான் சமீபத்தில்தான் ட்ரூகாலர் என்ற ஆப்பை என் மொபைலில் நிறுவினேன். உபயோகித்தும் வருகிறேன்.
மிகவும் உபயோகமான ஆப்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த குறுஞ்செய்திகளை நிர்வகிக்கும் பொறுப்பை அதனிடம் கொடுத்தேன்.
அது முதல் இந்த வங்கிக் குறுஞ்செய்தி, மற்ற பல SMS களில் அது ஒரு முறை கடவு எண்ணை மட்டும் பெரிதாக ஒரு தனி செய்தியாகக் காட்டுகிறது. இதில் எங்கிருந்து வந்தது என்பதும் காட்டப் படுகிறது. ஆனால் எதற்காக அனுப்பப் பட்டது என்று காட்டுவதில்லை.
வங்கிகள் எப்போதும் கடவு எண்ணை அனுப்பும்போது அது எதற்காக அனுப்பப் பட்டது என்ற காரணத்தை விவரமாகக் குறிப்பிட்டு இருப்பார்கள்.
அதாவது, நீங்கள் பெட் ரோல் போட்டு கார்டு தேய்த்தால் வரும் செய்தியில் இந்த பங்கில் இவ்வளவு செலவு செய்வதற்கான கடவு எண் எனக் குறிப்பிடப் பட்டு இருக்கும்.
இது போல நீங்கள் ஒரு லிமிட்டை மாற்றுகிறீர்கள் என்றால், அதை சரி பார்க்க வரும் செய்தியில், இன்ன காரணத்திற்காக இந்த கடவு எண் அனுப்பப் படுகிறது என்று குறிப்பிடப் பட்டு இருக்கும்.
ட்ரூகாலர் போன்ற ஆப்களில் இந்த. விவரங்கள் மறைக்கப் பட்டு விடுவதால், இந்த. மோசடி அழைப்ப்பாளர்கள், உங்களுக்கு வங்கியில் இருந்து ஒரு OTP வரும், அதைச் சொல்லுங்கள் என்றவுடன், நம் ஏமாந்த வாடிக்கையாளர் திரையில் பெரிதாகக் காட்டப் படும் எண்ணை உடனே கூறி விடுகிறார். அது எதற்காக அனுப்பப் பட்டது என்ற. விவரங்களைப் பார்ப்பது இல்லை. அது உங்களுடைய பதியப்பட்ட மொபைல் எண்ணை மாற்றுவதற்காகக் கூட இருக்கலாம். இனிமேல் வரும் அத்தனை கடவு எண்களும் அந்த. புதிய. எண்ணுக்குதான் செல்லும் என்று புரியும்போது காலம் கடந்து இருக்கும். பல லக்ஷங்கள் நஷ்டமாகிக் கூட இருக்கலாம்.
ஆகவே ஒவ்வொரு கடவு எண்ணையும் யாரிடமாவது சொல்வது மட்டுமல்ல, நீங்களே பதிவது என்றால் கூட முழுக் குறுஞ் செய்தியையும் படித்து பிறகு பதிவிடவும். இதனால் பெரிய நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.
நன்றி. மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.
No comments:
Post a Comment