**எதிர் வீடு, அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடைய கண் திருஷ்டி நம் குடும்பத்தின் மேல் விழாமல் இருக்க, நிலை வாசல் படியில் இந்த சுவாமி படம் வையுங்கள் போதும்.**
நம்முடைய வீட்டில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களோடு நாம் நல்ல நட்புறவோடு தான் இருப்போம். ஆனால் அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை விட, வசதியில் நாம் குறைவாக இருந்தாலும், அவர்களுக்கு நம்மேல் ஒரு பொறாமை இருக்கும். என்னதான் அவர்களிடம் நல்ல துணிமணி, நகைகள் இருந்தாலும், அடுத்தவர்களை பார்த்தும், சில பேருக்கு பொறாமை இருக்கும். அடுத்தவர்களுடைய குடும்ப விஷயத்தில் நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பார்கள். அடுத்தவர்கள் குடும்ப விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தால் நீங்கள் பின் சொல்ல கூடிய இந்த சின்ன பரிகாரத்தை செய்து கொள்ளலாம். நிச்சயமாக அவர்களுடைய கெட்ட எண்ணம் உங்கள் குடும்பத்தை தாக்காது.
இந்த பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு இந்த இடத்தில் நாம் இன்னொரு விஷயத்தையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். நிறைய பேர் எட்டாவதாக பிறந்தவர்களை அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்று சொல்கிறார்கள். எட்டாவதாக பிறந்தவர்கள் முகத்தில் விழித்தால் நமக்கு கெட்டது நடக்கும் என்ற தவறான ஒரு கருத்து இருக்கிறது. அப்படி கிடையாது. எட்டாவது பிறந்தவர்கள் எல்லோரையுமே கெட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்களைப் பார்த்தால் நமக்கு கெட்டது நடந்து விடும் என்பது அர்த்தம் கிடையாது.
நல்ல மனம் கொண்டவர்கள், அடுத்தவர்களுக்கு தீங்கு எண்ணாத குணம் கொண்டவர்கள், யாருமே கெட்டவர்கள் இல்லை. அவர்களுடைய பிறப்பை வைத்து அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள், என்று நாமே முடிவு செய்து கொள்ளக்கூடாது. ஆகவே எட்டாவதாக பிறந்தவர்களை அனாவசியமாக ஒதுக்கி வைக்காதீங்க. யாருடைய மனதையும் நாம் புண்படுத்தக் கூடாது. அதுவே மிகப்பெரிய பாவச் செயலாக கருதப்படுகிறது. ராசி இல்லை அதிர்ஷ்டம் இல்லை என்று கூடுமானவரை உங்கள் வாயால் சொல்லி அடுத்தவர்களை ஒதுக்கி வைக்காதீங்க, என்ற இந்த ஒரு நல்ல தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.
என்னதான் நான் நன்மை நினைத்தாலும், நமக்கு தீங்கு நினைப்பவர்கள் இருக்க தானே செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் நம்மை நாம் பாதுகாத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். உங்களுடைய நிலை வாசலில் குழந்தை கிருஷ்ணனின் பொம்மையை வெண்ணெய் சாப்பிடுவது போல இருக்கக்கூடிய ஒரு பொம்மையை மாட்டி வைக்க வேண்டும். நிலை வாசலில் அழகான இந்த குழந்தை கண்ணனின் படம் இருந்தால் வீட்டிற்குள் கண் திருஷ்டி நுழையாது.
அதேபோல வீட்டிற்கு உள்ளே வந்தவுடன், வீட்டிற்குள் நுழைப்பவர்கள் அவர்களுடைய முகத்தை கண்ணாடியில் பார்ப்பது போல ஓரளவுக்கு பெரிய கண்ணாடியாக வரவேற்பு அறையில் மாட்டி வையுங்கள். பொறாமை எண்ணத்தோடு, பொறாமை பார்வையோடு யாராவது வந்து அந்த கண்ணாடியை பார்த்தால், அவர்களின் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் அந்த கண்ணாடி ஏற்றுக்கொள்ளும்.
ரொம்பவும் மன கஷ்டமாக இருக்கிறது. மனபாரம் குறையவே இல்லை என்பவர்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். சிவபெருமானுக்கு வில்வ இலைகளை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யுங்கள். கட்டாயமாக சிவன் கோவிலில் காலை அபிஷேகம் நடக்கும். அந்த அபிஷேகத்தை பார்க்க வேண்டும். அபிஷேக தீர்த்தத்தை வாங்கி சிறிதளவு பருகி, சிவன் கோவிலில் இருக்கும் கொடிமரத்தடியில் அமர்ந்து, நமசிவாய மந்திரத்தை சொல்லி ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி எல்லா பாரத்தையும் சிவனின் பாதங்களில் இறக்கி வைத்து விட்டு வந்து விடுங்கள்.
உங்களுடைய மனது இரண்டு நிமிடத்தில் லேசாகும். இப்படி தியானம் செய்யும் போது கையில் இரண்டு வில்வ இலைகளை கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள். மேல் சொன்ன விஷயங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்
No comments:
Post a Comment