எனக்கு கிரெடிட் கார்டு ஒன்று இருந்தது. சுமார் எழுபத்து ஐந்தாயிரம் ரூபாய் வரை லிமிட்..தேவைப்படும் போது பயண்படுத்திகொண்டிருந்த நிலையில், அதன் நிலுவைத்தொகையை கட்டி சரண்டர் செய்துவிட்டேன்.
ஆனால், ஒரு மாதம் கழித்து நிலுவைத்தொகை சுமார்.₹.0.78 பைசாவுக்கு, மினிமம் கட்டவேண்டும் என்று மெசேஜ் அனுப்பியிருந்தார்கள்.
எழுபத்து எட்டு பைசாவுக்கு டெபாசிட் சலான் எழுதி நான் காசாளரிடம் நீட்ட, அவர் நீங்கள் கிளை மேளாலரிடம் பைசாவை கட்டுங்கள் என்றார்..கூடவே, ₹.0.78 பைசாவுக்கு எங்களால் கணக்கு வைக்க முடியாது என்றார்.
நானோ, Oxis Bank பேங்க் அனுப்பிய Due Statement தானே இது... நீங்களும் Oxis Bank தானே.. என்று மெசேஜை காட்டி கேட்டுவிட்டு, நீங்கள்தானே கேசியர்..? எதற்கு மேனேஜரை பார்க்கவேண்டும் என்று வினவ,..
அவரோ திரு திருவென முழித்துவிட்டு, சார் நான் எப்படி மீதி ₹.0.22 பைசாவை தரமுடியும்...அப்படியே ஒரு ரூபாயை அக்கௌன்ட் பண்ணினாலும் எங்கள் கணக்கில் அதிகம் காட்டும்...Better to meet our Manager என்றார்.
நான் விடுவதாக இல்லை.. Gentleman நீங்க கேசியர்தானே..இது உங்களோட பிரச்சனை..பணம் கட்டி ரெசிப்ட் வாங்கவேண்டியது என்னோட பிரச்சனை..நீங்க உங்க மேனேஜரை பாருங்கள் என்றேன்.
இந்த விவாதத்தை கவனித்துக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் எனக்கு ஆதரவு தர வங்கியில் சலசலப்பு ஏற்பட்டது. இது கண்ணாடி கூண்டுக்குள் அடைபட்டிருந்த அந்த அந்திமந்தாரை மேனேஜர் எழுந்து வந்தார்.
வந்தவர் Oxis Bank Statement டை பார்த்துவிட்டு, கேசியரிடம் ஒரு ரூபாய் வாங்கி புக் பன்னுங்கள்...மீதி ₹.0.22 பைசாவுக்கு பேங்கிலிருந்து செக் கொடுத்துவிடலாம் என்றாரே...பார்ப்போம்.
எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.. கொஞ்சம் நிறுத்திக்கொண்டு,
நான் எப்போது தருவீர்கள் என்று கேட்க..
கொரியரில் இன்னும் செவன் ஒர்க்கிங் டேயில் வருமென்றார்...
உடனே...அதுவரை நீங்கள் என்னுடைய கடன்காரன் என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டு வந்தேன் வீட்டுக்கு.
No comments:
Post a Comment