Friday, March 24, 2023

ரங்கநாதரின் திருவுருவத்தை அடையாளம் காட்டி ஊர்ஜிதம் செய்ததும் பார்வை இல்லாத வண்ணார் தான் 👏

 அந்தக் காலத்தில் சில நாட்களுக்கு ஒரு முறை வண்ணார் வீடு வீடாக வந்து ‘அழுக்கு’ எடுத்துக் கொண்டு போவார்கள்.துணிகளையெல்லாம் மூட்டைகளாகக் கட்டி..கழுதை மேல் சுமத்தி குளத்துக்கோ.. கால்வாய்க்கோ..

ஆற்றுக்கோ வெளுக்க எடுத்துக்கொண்டு போவார்கள்..
சவக்காரம் போட்டு..
உவர் மண் போட்டு வெள்ளாவி வைத்து வெளுத்து.. வெள்ளைத் துணிகளுக்கு நீலம் முக்கி.. வெயிலில் காயப் போட்டு..
எல்லா மதத்துக்காரர் துணிகளையும் அள்ளிக் கட்டி கழுதை மேல் வைத்து வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போவார்கள்..
.
அதன் பின் அந்தந்த வீட்டுத் துணிகளை அவற்றில் தான் சோரங்கொட்டை சாற்றால் தயாரித்த ‘வண்ணார் மை யைக் கொண்டு போட்ட குறியைப் பார்த்து
(ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒவ்வொரு விதமாக குறியீடு போடுவதற்கே ஒரு தனி கோர்ஸ் நடத்தலாம்) தனித் தனியாக பிரித்து..
இஸ்திரி போட்டு.. கட்டி.. வீடுகளுக்குப் போய் கொடுப்பார்கள்..
அதிலும் சில துணிகள் வீடு மாறி போனாலும்..
இது கவுண்டர் சட்டை..
இது நம்ம தேவர் துணி என்று திருப்பி அனுப்புவதும் உண்டு..
இதற்குக் கூலியாக சில வீடுகளில் காசு கொடுப்பார்கள்.. சிலர் தானியம் கொடுப்பார்கள்.. இன்னும் சிலர் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரும் விளைச்சலில் இருந்து நெல்.. சோளம், பயறு வகைகளை கொடுப்பார்கள்..
அந்தக் காலத்தில் கொலைக் குற்றவாளிகள்.. கொலை செய்யப்பட்டவர்கள்..
விபத்தில் இறந்தவர்கள் போன்றவர்களை அடையாளம் காண..
அவர்கள் அணிந்திருக்கும் துணிகளில் இருந்த ‘வண்ணான் குறி’ பயன்பட்டது..
வீடுகளில் ‘வண்ணார் கணக்கு’ எழுதுவதற்கென்றே பழைய நோட்டு ஒன்னு இருக்கும்..
வெள்ளாவி வைத்து வெளுத்த துணிகளுக்கு ஒரு தனி வாசனை உண்டு..
புது புத்தகங்களை உள் பக்கத்தில் முகர்ந்து பார்ப்பதில் கிடைக்கும் ரம்மியமான உணர்வு வெளுத்த துணியை உடுத்திருக்கும்போதும் கிடைக்கும்...
இப்போது அந்த வாசனையை இழந்து விட்டோம்..
வீட்டில் சுக துக்கம் எது நடந்தாலும் முதல் ஆளாக இருப்பது நம் வண்ணார்கள் தான்.
65 வருடங்களுக்கு முன்னால் எங்கள் வீட்டிற்கு வரும் வண்ணாத்தியின் பெயர் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. பழனியம்மாள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...