அண்ணாமலைக்கு ஏதோ பிஜேபி தலைமை ஆப்பு வைப்பது போலவும், ஆதரவு இல்லை என்றும் ஏராளமானோர் பதிவிட்டது வருந்த தக்கது.
தமிழகத்தில் கூட்டணி வைப்பதும் வைக்காததும் உடனடி பிரச்சினை இல்லை என்பது மேல் மட்ட தலைமைக்கு தெரியும்.
மேலும் அவர்கள் ஒரு போதும் அண்ணாமலையை ஓரம் கட்ட மாட்டார்கள். மற்றவர்களை போல் அண்ணாமலை இல்லை . என்று அறியாதவர்கள் இல்லை.
ஆனால் இன்றைய இந்திய அரசியல் நிலவரம் தமிழகத்தை விட தீவிர கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
ராகுல் முட்டாளோ அறிவாளியோ ஒரு புரம் இருக்கட்டும். அவரின் கொதிப்பும் அவமானமும், இந்திய அளவில் பயனளிக்கவில்லை. மக்கள் அவரை பித்தலாட்டகாரன் என்றே வட இந்தியா முழுதும் நினைக்கின்றனர்.
இது தெரிந்த சி ல காங்கிரஸ் பெரும் தலைகள் அவரை உசுப்பி விட வெளி நாட்டு தீய சக்திகளை நாட அறிவுரை செய்தது தான் பிரச்சினையே.
இந்த சந்தர்ப்பத்தை மிஷிநரிகளும்,நம் வளர்ச்சியில் பொறாமை கொண்ட தேசங்களும் பிடித்து கொண்டனர். அவர் அடிக்கடி வெளிநாட்டு பயணம் செல்வதின் நோக்கமே, மோடி சர்காரை கவிழ்க்கதான்! அதன் விளைவு காலிஸ்தான் கூலி படையின் அராஜகம்.
வளர்ந்த மேலை நாடுகளுக்கு, அசுர கதியில் இந்தியாவை முன்னேற்றம் காண வைக்கும் மோடியை கழட்டி விட நினைப்பது ஆச்சரியமில்லை.பெரும் வியாபார சந்தையாகிய இந்தியா தன்னிறைவு பெறுவதை அவர்கள் விரும்பவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக மிக நம்பிக்கை வைத்த உச்சம் வெளி நாட்டு கை பாவையாக மாறி கொடுக்கும் தலைவலி கொஞ்ச நஞ்சமல்ல.! நீதி மன்றத்தின் தலையீடு அன்றாட அலுவலகளிலும் பிரதி பலிக்கிறது. எதெற்கெடுத்தாலும் உச்சத்தை நாடுவோர் பெருகி விட்டனர்.
முன் போல் காலிஸ்தான் கோரிக்கை பஞ்சாபிலும் கிளப்பி விடப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு கூட்டு சதியிலிருந்து தேச பாது காப்பு மிக அவசியமாகிறது.
இந்த நிலையில் தமிழக கூட்டணி விஷயம் மந்த நிலையில் இருப்பதில் குடி முழுகி போகாது..முக்கிய பிரச்சினைக்கு ஒரு வடிகால் காணும்வரை கூட்டணி வைப்பதும் வைக்காததும் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.
அண்ணாமலையை ஒதுக்கி விட்டு ஒரு காலும் மத்திய அரசு இயங்காது. அவரை உசுப்பேற்றி விட்டு, நல்ல தலைவரை, உங்களால் இழக்க வைக்காதீர்கள்!!
விவேகம் அனுபவத்தின் முதிர்ச்சி, நினைவில் இருக்கட்டும்.
No comments:
Post a Comment