மனிதன் தான் ஒரு பொம்மலாட்ட பொம்மை என்பதை யாராவது அறிந்திருக்கிறார்களா?
என் வீடு, என் மனைவி, என் மக்கள், என் செல்வம், என்னுடைய கார், நான் சமுதாயத்தில் எவ்வளவு பெரிய ஆள், எவ்வளவு படித்தவன், எவ்வளவு புத்திசாலி யானவன் என்று மனிதன், நான், எனது என்று அனைத்தையும் சொந்தம் கொண்டாடு கிறார்கள்.
அந்த இறைவனை, நம் மகேஸ்வரனை எம்பெருமான் ஈசனை எப்படி வாழ்த்துவது?
நாம் வாழ்த்தி அவனுக்கு
என்ன ஆகப் போகிறது ?
வாழ்த்துவது என்று முடிவு செய்து
விட்டால் என்ன சொல்லி வாழ்த்துவது...
*வான், மண், காற்று, ஒளி அனைத்தும் நீ, உடல், உயிர் இரண்டும் நீ,*
*உண்டு என எண்ணுவோருக்கு*
*நீ உண்மை, இல்லை என எண்ணுவோருக்கு நீ இன்மை, இப்படி இரண்டாகவும் நீ திகழ்கிறாய், எங்கள் தலைவனாகச் சிறந்து விளங்குகிறாய்...
*நான், என்னுடையது என்று கர்வம் கொண்டு நிற்கிறவர்களை கூத்தாடச் செய்கிறவனாக நிற்கிறாய், உன்னை நான் என்ன சொல்லி வாழ்த்துவேன் சிவபெருமானே!!
சர்வம் சிவமயம்
No comments:
Post a Comment