திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயம் வரை செல்ல உம்மன் சாண்டியின் இறுதி ஊர்வலத்திற்கு 28 மணி நேரம் ஆனது...
இந்த 150 கி.மீ தூரம் வழக்கமாக சுமார் 3 - 4 மணி நேரத்தில் செல்லக்கூடிய தூரம்.
ஆனால், அதைக் கடக்க 28 மணி நேரம் ஆனதே எந்தளவுக்கு கூட்டம் திரண்டிருந்தது என்பதற்கான சாட்சி.
பின்னர் மாலையில் புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்திற்கு உம்மன் சாண்டியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
அதன்பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
உம்மன் சாண்டியின் உடல், தேசியக்கொடி போர்த்தப்படாமல் அரசு மரியாதையின்றி அடக்கம் செய்யப்பட்டது.
உம்மன் சாண்டியின் உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கேரள அரசு திட்டமிட்டது.
ஆனால், உம்மன் சாண்டியின் கடைசி விருப்பத்தின்படி, எந்தவித அரசு மரியாதையும் இன்றி அவரது உடலை அடக்கம் செய்ய விரும்புவதாக அவரது குடும்பத்தினர் கேரள மாநில தலைமை செயலருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இதையடுத்து உம்மன் சாண்டியின் குடும்பத்தினரின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டது.
அதன்படி, உம்மன் சாண்டி உடல் அரசு மரியாதை இன்றி, தேசியக்கொடி போர்த்தப்படாமல் உம்மன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உம்மன் சாண்டியின் இறுதிச் சடங்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநில ஆளுநர்ர் ஆரிப் முகமது கான், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment