Tuesday, July 18, 2023

மணிப்பூர்_கலவரம்_ஏன்?

  மணிப்பூர்,சமீப காலமாக செய்திகளில் அதிக மனவருத்தம் தரும் அளவுக்கு பரபரப்போடு பார்க்கப்படுகிறது.

மணிப்பூரில் கிறிஸ்தவர்கள், இந்துக்களால் தாக்கப்படுகிறார்கள், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களைத் தீ வைத்து கொளுத்துகிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
ஆனால் உண்மை நிலவரம் என்ன?
மணிப்பூரில் இருக்கும் முக்கியமான இன குழுக்கள் மெய்தி, குய்கி, நாகா, சனாமகி மற்றும் இஸ்லாமியர்கள்.
இதில் மெய்தி இனத்தவர்களில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சனாமகி என்ற மெய்தி பாரம்பரிய வழிபாட்டினை கடைபிடிக்கும் மக்களும் அடக்கம். அதுமட்டுமின்றி மெய்தி இனத்தவர்களின் உட்பிரிவுகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலும் வருகிறது.
குய்கி மற்றும் நாகா இனத்தவர்கள் மிசோராம் மற்றும் நாகலாந்தினை போல கிறித்தவர்களாக மதமாற்றப்பட்ட பழங்குடியினர்.
இப்போதைய பிரச்சினைக்கு முக்கிய காரணம் மெய்தி இனத்தவர்கள் ‌Scheduled Tribe எனப்படும் 'பழங்குடியினர் ' என அறிலிக்கப்பட வேண்டும் எனக் கேட்பது தான்.
மன்னராட்சி நடந்து கொண்டிருந்த மணிப்பூர் சுதந்திர இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகு இந்தியா முழுவதும் பழங்குடியினர் அந்தஸ்திற்கு விருப்பப்படும் இனத்தவர்கள் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டது. அதன்படி , பழங்குடியினர் பட்டியலினை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது, அன்றைய மெய்தி இனத் தலைவர்கள், அதனால் கிடைக்கப் போகும் சலுகைகள் குறித்த தொலைநோக்கு பார்வை இல்லாததாலும், மூவாயிரம் ஆண்டுகளாக மணிப்பூரை ஆண்ட அரச வம்சத்தவர்கள் என்ற நினைப்பின் காரணமாக பழங்குடியினர் அந்தஸ்து தேவை என்று கேட்காமல் விட்டு விட்டனர்.
இப்போது பல ஆண்டுகளாக பழங்குடியினர் பிரிவில் தங்களை இணைக்க கோரி போராட்டங்கள் பல நடத்தி வந்தவர்களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து, மெய்தி இனத்தவர்களின் கோரிக்கையின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பழங்குடியின மாணவர்கள் நடத்திய ஊர்வலங்கள் கலவரத்தில் முடிந்தது. இதைத் தொடர்ந்து பல நாட்கள் இரு தரப்பு வன்முறை ,தாக்குதல்கள் தொடர்ந்தது,
இப்போது குறைந்துவிட்டாலும் ஆங்காங்கே ஒன்றிரண்டு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தபடியே இருக்கிறது.
இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால்
'மணிப்பூரில் கிறித்தவர்கள் இந்துக்களால் திட்டமிட்டு விரட்டி அடிக்கப்படுகின்றனர். சர்ச்சுகளை தீ வைத்து எரிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வன்முறை தாக்குதல்களுக்கு பயந்து இடம் பெயர்ந்துள்ளனர். சிறுபான்மை மக்களை இன அழிப்பு செய்கின்றனர்'
என்ற செய்தி இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் விரைவாக பரவியது.
அதாவது பொய்யாக அப்படி பரப்பப்பட்டது.
சில நாட்களாகவே நாடு முழுவதும் மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்று மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலங்களை கிறித்தவ மற்றும் இடதுசாரி அமைப்புகள் நடத்தி வருகின்றனர்.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் தேவையே இல்லாமல், மனிதாபிமான அடிப்படையில் மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த அமெரிக்கா உதவ தயாராக உள்ளது என்று கூட பேசினார்.
இந்தியாவில் உள்ள ஏதோவொரு கடைக்கோடி கிராமத்திலுள்ள சர்ச்சுகளில் கூட மணிப்பூரில் கிறித்தவர்களை அழிப்பதற்காக கலவரம் செய்கிறார்கள் என்ற பெயரில் பொய்ப் பிரச்சாரங்களும், கண்டனக் கூட்டங்களும் நடக்கின்றன ,
என்றால்
'ஒரு தவறான செய்தியை பெரிய அளவில் பரப்பும் சில குறிப்பிட்ட மிஷனரிகளின் வல்லமையை இதனால் உணர முடிகிறது.
உண்மையில் நடந்தது என்னவென்றால்
வன்முறை சம்பவங்களால் கடுமையான பாதிப்பினை சந்தித்தவர்கள் மெய்தி இன மக்களே.
வீடுகளை இழந்து விரட்டி அடிக்கப்பட்டு, பாதுகாப்பு படையினர் துணையுடன் இடம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் மெய்தி இன மக்கள் தான் அதிகம். பாதிக்கப்பட்ட மக்களில் 75 சதவீதம் பேர் மெய்தி இன மக்கள்.
"மணிப்பூரின் புவியியல் அமைப்புப் படி பத்து சதவீத பகுதி மட்டுமே சமவெளி பகுதி, மீதமுள்ள பகுதி மலையும் மலை சார்ந்த இடங்களும் ஆகும்."
இந்த பத்து சதவீத பகுதிகளில் மெய்தி இனத்தவர்கள் பெரும்பான்மையினராக அதாவது 65 சதவீதம் வரை இருக்கின்றனர். அதேபோல் கல்வி மற்றும் பொருளாதார அளவில் முன்னேறிய வகுப்பினராகவும் உள்ளனர்.
மலை சார்ந்த பகுதிகள் முழுவதும் குய்கி மற்றும் நாகா இனத்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
காடுகளில் கிட்டத்தட்ட 27 சதவீதம் பகுதிகள் "ரிசர்வ்டு பாரஸ்டாக " காப்புக் காடுகளாக இருக்கிறது. அதாவது யாரும் அத்துமீறி குடியிருப்புகளை அங்கே அமைக்கக் கூடாது.
மணிப்பூரில் 31% ST, OBC17%, SC 2% என்ற அளவில் இட ஒதுக்கீடு உள்ளது.
குய்கி இனத்தவர்கள் மெய்திகளுக்கு பழங்குடியினர் அந்தஸ்து தரக்கூடாது என்று சொல்வதற்கு முக்கிய காரணம், 'தங்களது இட ஒதுக்கீட்டு சலுகை முன்னேறிய மெய்திகளால் பங்கிடப்படும் என்ற அச்சமே'.
ஆனால் "மெய்தி இனத்தவர்கள் இப்படி பழங்குடியினர் அந்தஸ்து கேட்க முக்கிய காரணம்,
சமவெளி பகுதியான பத்து சதவீத நிலப்பரப்பில் மட்டுமே மெய்திகளால் இடம் வாங்க முடியும், மற்ற‌90% மலை சார்ந்த பகுதிகளில் மெய்திகளால் இடம் வாங்க முடியாது. கிட்டத்தட்ட காஷ்மீர் போன்ற ஒரு நிலைப்பாடு.
அதே நேரம் பழங்குடியின நாகா மற்றும் குய்கி இனத்தவர்களால் மணிப்பூரின் எந்த பகுதியிலும் இடங்களை வாங்க முடியும்."
இதுதான் மெய்திகளின் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு முக்கிய காரணம். பத்து சதவீத பரப்பிற்குள் சுருக்கப்பட்ட மெய்திகள், தொடர்ந்து பிற இன குழுக்களின் இட குவிப்பினால் தங்களது இனம் மற்றும் கலாச்சாரம் அழிவினை நோக்கி செல்கிறது என்ற அச்சமடைந்ததுவிட்டனர்.
இவர்கள் அச்சம் அதிகரிக்க முக்கிய காரணம் 1970 களில் 62 சதவீதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை , 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 44 சதவீதமாகவும், இப்போது அது 41 சதவீதமாகவும் , குறைந்து விட்டது.. அதேவேளையில் 16 சதவீதமாக இருந்த கிறித்தவர்களின் எண்ணிக்கை மிஷனரிகளின் மதமாற்ற செயல்பாடுகளால் 41 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது மட்டும் கலவரத்திற்கு காரணம் அல்ல.
* கடந்த சில ஆண்டுகளாக மணிப்பூரின் மலை மற்றும் காட்டு பகுதிகளில் நடந்து வரும் குய்கி இனத்தவர்களின் சட்ட விரோத ஆக்கிரமிப்பு மற்றும் குடியிருப்புகளை மாநில பாஜக அரசு அகற்றுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குய்கி இனத்தவர்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.
* கிட்டத்தட்ட ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான எல்லை பகுதியினை அண்டை நாடான மியான்மருடன் பகிர்ந்து கொள்கிறது. அங்கே ராணுவ கொடுங்கோல் ஆட்சி நடந்து வருவகிறது. அங்கிருந்து தப்பி வருபவர்கள் மணிப்பூர் காட்டு பகுதிகளுக்குள் தஞ்சமடைகின்றனர். இவர்கள் குய்கி இனத்தின் உட்பிரிவு என்பதால் எதிர்கால அரசியல் ஆதாயம் கருதி குய்கி இனத்தவர்கள் ஆதரவு தந்து இணைத்து கொள்கின்றனர்.
* மியான்மரில் இருந்து தஞ்சமடைந்தவர்கள், சட்ட விரோதமாக நுழைந்துள்ளவர்களின் தூண்டுதலால் காட்டு பகுதிக்குள் கிட்டத்தட்ட 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் ஓபியம் போதை செடிகள் பழங்குடியினரால் பயிரிடப்படுகிறது. அதை எதிர்த்து மாநில அரசு பிரச்சாரம் செய்து வருவதோடு, அவர்களை ஒடுக்குவதற்காக கடுமையான நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.
மணிப்பூரில் போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் ஐந்தாண்டுகளில் 2500 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* மியான்மரில் இருந்து ஊடுருவல் அதிகமாக உள்ளதால் மெய்திகளின் கோரிக்கையான என்ஆர்சி NRC பதிவினை சரிபார்க்கும் பணிகள் மெல்ல மெல்ல நடந்து வருகிறது. இது தங்களது ஆதிக்கத்தை பாதிக்கும் என்று குய்கி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
* ஏற்கனவே எல்லையோர மாநிலங்களில் சீனாவின் நடவடிக்கை அதிகமாக இருப்பதால், குய்கி இன மற்றும் மியான்மர் ஊடுருவல்காரர்களுக்கு ஆயுதம் வழங்கி பயிற்சி அளித்தும் வருகிறது.
* வன்முறைகளின் ஆரம்ப கட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் இருந்த பல காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு ஆயுதங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
அவர்கள் குய்கி இன போராளிகள் என சொல்லப்படுகிறது. இப்போது இந்த ஆயுதங்கள் அவர்களது வன்முறை வெறியாட்டத்திற்கு உதவுகிறது.
இவை அனைத்தும் தான் இப்போது நடைபெற்று வரும் கலவரத்தின் காரணிகள்.
மணிப்பூரில் இப்போது நடப்பது மதக் கலவரம் அல்ல, இரண்டு இனங்களுக்கு இடையேயான சண்டை மட்டுமே. ஆதாரம் மணிப்பூரில் 24% இருக்கும் நாகா பழங்குடியின மக்கள் வன்முறைகளில் கலந்து கொள்ளவில்லை.
இப்போது மிஷனரிகள் மற்றும் இடதுசாரி சமூக ஆர்வலர்களால் 'குய்கி இன கிறித்தவர்களை இன அழிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கிறார்கள்' என்ற வதந்திகளை திட்டமிட்டு பரப்பி, வன்முறையாளர்களை காப்பாற்ற முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் ஆதாயம் கருதி எதிர்க் கட்சிகளால்
'கிறித்தவ இன அழிப்பினை பாஜக அரசு வேடிக்கை பார்க்கிறது' என்ற செய்தி மிக வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
' இரவு நேரங்களில் ஆயுதங்களுடன் வந்து நகரை ஒட்டிய பகுதிகளில் தாக்குதல்களை நடத்திவிட்டு மீண்டும் காடுகளுக்குள் ஓடி ஒழிந்து கொள்பவர்கள் மெய்தி இன மக்களோ நாகா இன மக்களோ அல்ல' .
ஆனால் எதிர்கட்சிகளின் அரசியல்
"அடித்து விரட்டுபவர்களையே, பாதிக்கப்பட்ட மக்களாக மாற்றி நிறுத்துகிறது".
இவை அனைத்தையும் நன்றாக அறிந்துள்ள பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் பிற கட்சிகள், வேண்டுமென்றே பிரதமர் மோதி ஜி, பாஜகவுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்கின்றன. இது ஆளும் பாஜகவுக்கு தற்போதைக்கு சற்று பின்னடைவு என்றாலும், மத்திய அரசு அங்கே நடப்பவற்றை கண்காணித்து துணை ராணுவப் படைகளை அனுப்பி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இதில், போராட்டக்காரர்கள்
பெண்கள்,குழந்தைகளை அரணாக நிறுத்தி
அவர்கள் பின்னால் மறைந்து கொள்வதும் நடக்கிறது. முதல்வர் பீரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும். என்று மிகவும் அழுத்தம் தரப்பட்டது. ஆயினும், முதல்வர் இந்த நிலையில் , தாம் ராஜினாமா செய்வது இயலாது என்று மறுத்து விட்டார்.
இதில் அண்டை நாடுகளின் பங்களிப்பும் குறிப்பாக சீனாவின் பங்கு பின்னால் இருக்கக் கூடும்.
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இனி அங்கே புனரமைப்புப் பணிகள் முழு வீச்சில் ஆரம்பித்தாக வேண்டும். மழைக்காலம் நெருங்குவதால் மக்கள் அதற்குள் வேண்டிய வற்றை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நல்லதே நடக்கும் என நம்புவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...