விமானத்தினுள், விமானியின் அறையை சுத்தம் செய்யும் ஒரு பணியாள், விமானியின் காபினெட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது,
"விமானத்தை பறக்க வைப்பது எப்படி?(தொகுதி 1)" என்று தலைப்பிட்ட ஒரு புத்தகத்தை பார்த்தார்.
அவர் முதல் பக்கத்தைத் திறந்தார்: "என்ஜினை ஆன் செய்ய, சிவப்பு பொத்தானை அழுத்தவும்" என்று இருந்தது. அவர் அவ்வாறே செய்தார், விமான இயந்திரம் இயங்க தொடங்கியது.
"விமானத்தை நகர்த்த, நீல பொத்தானை அழுத்தவும்... "அவர் அவ்வாறே செய்தார், விமானம் அற்புதமான வேகத்தில் நகரத் தொடங்கியது.
அவர் பறக்க விரும்பினார், எனவே அவர் மூன்றாவது பக்கத்தைத் திறந்தார்: விமானத்தை பறக்க வைக்க, பச்சை பொத்தானை அழுத்தவும்.."
அவர் அவ்வாறே செய்தார், விமானம் பறக்கத் தொடங்கியது.
உற்சாகமாக இருந்தார்...!!
இருபது நிமிடங்களுக்குப் பிறகு, பறந்து திருப்தி ஆன பின், விமானத்தை தரையிறங்க விரும்பினார், எனவே அவர் நான்காவது பக்கத்திற்குச் செல்ல முடிவு செய்தார்.. நான்காம் பக்கத்தில், "விமானத்தை எவ்வாறு தரையிறக்குவது என்பதை அறிய, அருகிலுள்ள புத்தகக் கடையில் தொகுதி 2 ஐ வாங்கவும்!"
முழுமையான தகவல் இல்லாமல் எதையும் முயற்சிக்காதீர்கள். பாதி கற்பது ஆபத்தானது மட்டுமல்ல அழிவுகரமானதும் கூட. முழுமையாக கற்றுக்கொண்டு செயலில் இறங்குங்கள்........
No comments:
Post a Comment