குடும்பம் ஒரு கதம்பம் படத்தில், சுஹாசினியின் தம்பியாக வரும் அந்த நாள் சமத்துப் பையன் கேரக்ட்டர் ஆர்ட்டிஸ்ட் பாஸ்கரை வலியப் போய் காதலிக்கும் ஐயராத்து தாவணிப் பெண். வாலியின் வரிகளில் "எங்காத்துக்கு மாப்பிள்ள நீ! உங்காத்துக்கு மாட்டுப் பொண்ணு நான்" என்று பாடி ஆடி அசத்தியவர்.
வலியப் போய் அடாவடியாக அடுத்தவரை வம்பிழுக்கும் உதவாக்கரை குடும்பத் தலைவலி கணவன் - விசு....
இந்த தம்பதியின் பெண்ணரசி. ஒருதலை காதலுக்கு நடுவே குடும்பக்கஷ்டத்தை புரிந்து கொண்டு தொழுநோயாளிக்கு பணிவிடை செய்து வீட்டுக்காக ரகசியமாக சம்பாதித்து மனி ஆர்டர் அனுப்பும் பொறுப்புள்ள மகள்.
அத்தனை சிறிய வயதில் மிகப் பிரமாதமாக நடித்து மனம் கவர்ந்தவர் நித்யா. இன்று இன்னும் மெச்சூர்டான பல கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
போன வாரம் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வாக நடந்த திருவல்லிக்கேணி ஹ்யுமர் க்ளப் மீட்டிங்கில் பாலச்சந்தரின் கதாநாயகிகளைப் போலவே நறுக்குத் தெரித்தாற்போல மிக அழகாக புகழுரை வழங்கினார்.
நிகழ்ச்சி முடிவில் அவரை நேரில் பாராட்டி, குடும்பம் ஒரு கதம்பம் "எங்காத்துக்கு மாப்பிள்ளை நீ" பாட்டையும் நினைவு கூர்ந்து எடுத்துக் கொண்ட படம்.
No comments:
Post a Comment