"பாஜகவிடமிருந்து இந்தியாவைக் காத்திடவும், 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட இந்தியாவையும் அதன் ஜனநாயகத் தன்மையைக் காத்திடவும் பெங்களூரு நகரில் உண்மையான இந்தியா உருவாகியிருக்கிறது. இத்தனை நாள் இந்தியாவின் தேசபக்திக்கு தாங்கள் மட்டுமே ஒட்டுமொத்த குத்தகைதாரர்கள் போல செயல்பட்டு வந்த பாஜகவினரும் அதன் பரிவாரத்தினரும், ஜனநாயக இயக்கங்களின் கூட்டணிக்கு 'இந்தியா' என்ற பெயர் சூட்டியதும், அந்தப் பெயரை உச்சரிப்பதற்கே தயக்கம் காட்டியதன் மூலம், அவர்களின் போலி தேசபக்தி முகமூடி கழன்று தொங்குவதைக் காண முடிகிறது.
'இந்தியா' என்ற சொல் இப்போது அவர்களுக்குப் பிடிக்காத சொல்லாகிவிட்டது. இந்தியாவைப் பிடிக்காவிட்டால் ‘பாகிஸ்தானுக்குப் போ’ என மதவாத சிந்தனையுடன் பேசிய பாஜகவினர் இப்போது எந்த நாட்டுக்கு விசா வாங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை."
என்றும் எழுதியுள்ளார் என்பதை விட
"மைன்ட் வாய்ஸ் என நினைத்து உண்மையை வெளியே கொட்டி விட்டார்' என்று தான் சொல்ல வேண்டும்.
'தங்களது கூட்டணிக்கு 'இந்தியா' என்ற பெயர் சூட்டலுக்கு பின்னால் இருக்கும் எதிர்கட்சிகளின் குதர்க்க, நயவஞ்சக அரசியலை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.
இவர்களது நோக்கம் மிகவும் அபாயகரமானது. 'இந்தியா' என்ற பெயரின் மான்பினை குலைப்பதற்காகவே அந்த பெயரினை தேர்ந்தெடுத்து உள்ளனர். இவ்வளவு நாள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இந்த தேசத்தினை சிதைத்த கூட்டம், இப்போது 'இந்தியா' என்ற வார்த்தைக்கு களங்கம் கற்பிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது.
ஆளும் பாஜக தரப்பு இதை தேர்தல் கமிஷனுக்கு எடுத்து செ(சொ)ல்ல வேண்டும். 'இந்தியா' என்ற எதிர்கட்சி கூட்டணியின் பெயரினை பயன்படுத்த தடைவாங்க வேண்டும். தேவைப்பட்டால் இந்த விவகாரத்தை சட்டரீதியாக நீதிமன்றத்தில் புகாரளிக்க வேண்டும்.
"Indian National Developmental Inclusive Alliance" அதாவது "INDIA" என்று பொருள் வருமாறு பெயரை அமைத்து, அறிவித்துள்ள
எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு அனைத்து தரப்பு மக்களும் தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.
கட்சிகளின் பெயரில் 'இந்தியா' என்பதனை இடம்பெறச் செய்வதில் தவறில்லை. ஆனால் கட்சியின் பெயரையோ அல்லது அமைப்பின் பெயரையோ 'இந்தியா' என்று வைத்துக்கொள்வதை கட்டாயம் எதிர்த்து தான் ஆகவேண்டும்.
எதிர்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு எந்த பெயரையும் வைத்துக்கொள்ள உரிமை உண்டு. ஆனால் தேசத்தின் அடையாளத்தை, தங்களது பெயராக வைத்துக்கொள்வது என்பது
'தேசத்திற்கான புகழையும், மரியாதையையும், மான்பினையும் சுயநலத்திற்காக அபகரித்து கொள்ளும் செயல்'.
எதிர்கட்சிகளின் இந்த நயவஞ்சக செயலை, இந்த தேசத்தின் ஒவ்வொரு உண்மையான குடிமகனும் எதிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment