அ.து: ரெய்டு பண்ணதுல உங்க மேல வழக்கு போடத் தேவையான ஆதாரங்களும் ஆவணங்களும் கிடைச்சிருக்கு.
அ.து: இது விஷயத்தில் மேற்கொண்டு விசாரிக்கணும்.
பொ.மு:
அ.து: என்னங்க நீங்க, வாயத் தொறந்து எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க?
பொ.மு:
பொ.மு மருத்துவர்கள்: அவருக்கு தொண்டையில் ஆறு அடைப்பு இருக்கு!
அவரால் தண்ணி கூட குடிக்க முடியாது!
அ.து: எப்போது சரியாகும்?
மருத்துவர்கள்: அவருக்கு உடனடியா ஆபரேஷன் பண்ணி ப்ளாக் ரிமூவ் பண்ணனும்! போய்ட்டு அவருக்கு குணமானவாட்டி வாங்க!
அ.து: ஆபரேஷன் முடிஞ்சு எப்போது சரியாகும்?
மருத்துவர்கள்: நாங்க சொல்லி அனுப்பறோம்! இப்போ கிளம்புங்க!
சரியென்று சோர்வாகத் தலையாட்டி விட்டு வெளியே வந்தவர்கள் கண்ணில் எதிரே வந்த ஸொமாட்டோ நபர் கையில் ஒரு பார்சல் இருப்பதைப் பார்த்து விட்டு அந்த நபரிடம் விசாரிக்க, சில்லி சிக்கன், ரத்தப் பொரியல், முட்டை பிரியாணி, மட்டன் குருமா இருப்பதைப் பார்த்து விட்டு, இது யாருக்கு என்று கேட்க, அந்த நபர் "மந்திரி ஐயாவுக்கு இதெல்லாம் ரொம்ப பிடிச்ச ஐட்டம், ஆர்டர் பண்ணினாரு, கொண்டு வந்திருக்கேன்" என்றார்!
No comments:
Post a Comment