வீட்டிற்கு ஒரே பையன் என்பதால் கஷ்டம் என்ன என்று தெரியாமல் வளர்ந்ததுதான் கஷ்டம் ஆகி விட்டது.
பாலிடெக்னிக் முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் தண்டச்சோறாக இருந்து கொண்டு நண்பர்களுடன் ஊர் ஊராக கிரிக்கெட் கபாடி என்று சுற்றிக் கொண்டு இருந்து Police selection விளம்பரம் பார்த்து நண்பர்களுடன் பொழுது போக்கு போல விண்ணப்பித்து சுமார் 20 பேர் ஒன்றாக சென்று கலந்து கொண்டதில் நான் ஒருவன் மட்டும் தேர்வாகி தற்போது வெற்றிகரமாக 21-ம் வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.
இடையில் வந்த கஜா புயலினால் தோப்பில் இருந்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து அதன் பிறகு நான்கு வருடங்களாக ஊதியம் அனைத்தும் மிச்சம் இருக்கின்ற மரங்களின் பராமரிப்பிற்கே செலவிடும் நிலைமை.
வாழ்க்கையில் பல கஷ்ட நட்டங்கள் இன்ப துன்ப ங்கள் வந்த நிலையிலும் காவல்துறை என்றாலே லஞ்சம்தான் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ள நிலையில் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் இன்று வரை அரசால் வழங்கப்படும் சம்பளத்தை தவிர வேறு ஒரு பைசா கூட யாரிடமும் வாங்கிய தில்லை என்ற மனநிறைவுடன் என்றும் மக்கள் சேவையில்....
No comments:
Post a Comment