Friday, July 14, 2017

உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது ....


🌐 காட்டிலிருந்து 🐩 புலி ஒன்று வழி தவறி ஒரு 🏢 கார்ப்பரேட்
கம்பெனியின் 🚽 ரெஸ்ட் ரூம்புக்குள்
நுழைந்துவிட்டது.
😿 பதட்டத்துடன் இருந்த
அந்த புலி டாய்லெட்டின் ஓர் 🌑 இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது.
👉 மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு 🍜 பசி எடுத்தது.
👉 நான்காவது நாள் பசி தாங்க முடியாமல்
🚽 ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த
🚶 ஒருவரை அடித்துச் சாப்பிட்டது.
அவர், அந்த நிறுவனத்தின்
👔 அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர்.
👆 அவர் காணாமல் போனது அலுவலகத்தில்
யாருக்கும் தெரியாது,
யாருமே கண்டு கொள்ளவில்லை.
 இரண்டு நாட்கள் கழித்து, இன்னும்
ஒரு 🏃 நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.
👆 அவர், அந்த நிறுவனத்தின் 👓 ஜெனரல் மேனேஜர்.
👆 அவரையும் யாரும்
தேடவில்லை, கண்டுகொள்ளவும்
இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில்
இல்லையே என்று சந்தோஷப் பட்டவர்கள்தான் அதிகம்! 😄😃😀).
👉 இதனால் குளிர்விட்டுப் போன புலி,
😤 நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது.
👉 அடுத்த நாள் வழக்கம்போல்
ஒரு 👳 நபரை அடித்துக் கொன்றது.
அவர் அந்த அலுவலகத்தின் பியூன்.
அலுவலக ஊழியர்களுக்கு  காபி வாங்குவதற்காக
பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார்.
🕚 சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற
பியூனைக் காணவில்லையே என்று மொத்த
அலுவலகமும்
சல்லடை போட்டு தேடியது.
 நெடுநேர
தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில்
உயிரிழந்து கிடந்த. பியூனையும்,
அந்த ஆட்கொல்லி புலியையும்
கண்டுபிடிக்கிறார்கள்.
 புலி பிடிபடுகிறது 
📝 பாடம் 📝
👆 உங்கள் மீதான
🙌 மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் 👔 பதவியோ,
💰 வசதி வாய்ப்போ அல்ல.
👆 நீங்கள்
👉 👈 மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக
இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...