Monday, September 11, 2017

ஸ்வர்ணலதா .....

இன்று பாடகி ஸ்வர்ணலதா மறைந்த நாள். 14 வயதில் எம் எஸ் வி இசையில் முதல் பாடலை பாடினார். பின்னர் இளையராஜா இசையில் குருசிஷ்யன் படத்தில் உத்தம புத்திரி நானு என்னும் பாடலை பாடினார். பின்னர் பல ஹிட் பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
தளபதி படத்தில் ’ராக்கம்மா கையத் தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத்தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே, ஊரடங்கும் சாமத்திலே போன்ற பல பாடல்கள் பாடினார்
1994 - இந்தியாவின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான வெள்ளித்தாமரை விருது - படம் : கருத்தம்மா , பாடல் : போறாளே பொன்னுத்தாயி
தமிழக அரசு விருது. இந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
1991 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது - படம் : சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்கோலம்
ஜானகி, சித்ரா வரிசையில் இவருக்கும் தனி இடம் உண்டு. இளையராஜா அவர்களிடம் ஒரு பேட்டியில் தனித்துவமான குரல்கள் குறித்து கேட்டதற்கு அவர் ஸ்வர்ணலதா அவர்கள் குரலை குறிப்பிட்டார்.
நுரையீரல் பிரச்சினை காரணமாக 37 வயதில் காலமானார். சில திறமையானவர்களை இறைவன் இளம் வயதில் அழைத்து கொள்ளும் போது நெஞ்சில் வருத்தமே மூள்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...