அரசு நிலத்தை அபகரித்த வழக்கிலிருந்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2002-ம் ஆண்டு பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, 1996-2001 -ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் 1998ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, அரசுக்கு சொந்தமாக சைதாப்பேட்டையில் இருந்த 3600 சதுர அடி நிலத்தை மோசடி செய்து தனது மாமியார் சரஸ்வதி பெயரில் பதிவு செய்து வீடு கட்டியதாக குற்றாச்சாட்டு எழுந்தது.
அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
2007ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை மூன்றாவது அமர்வு நீதிமன்றம் வழக்கிலிருந்து பொன்முடியை விடுவித்தது. நீதிமன்ற உத்தரவில் சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த சொத்தும் அடங்கி இருப்பதால் ஒரு குற்றத்திற்காக இரு வேறு விசாரணைகள் நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அரசு நில அபகரிப்பு வழக்கிலிருந்து பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து இன்று உத்தரவிட்டார்.
அவரது தீர்ப்பில், சொத்துக் குவிப்பு வழக்கும், அரசு நில அபகரிப்பு வழக்கும் ஒரே மாதிரியானவையாக இல்லாதபோது, சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவித்ததற்காக நில அபகரிப்பு வழக்கிலும் விடுவித்தது செல்லாது என குறிப்பிட்டுள்ளார்.
எனவே பொன்முடி தன் மீதான அரசு நில அபகரிப்பு வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment