எந்த அரசியல் தலைவர் மறைவுக்கும் நான் அழுததில்லை.
அடுத்தடுத்து நான் அழுத நாட்களை சென்ற வருடம் கொடுத்தது. முதல் மரணம் ஜெயலலிதா!! என்னை ஆச்சரியமிட்ட ஒரு பெண்மணி..
இரண்டாவது மரணம் திரு.சோ ராமசாமி, அடியேனின் ஆச்சார்யன்.
இருவரும் ( சோ சாரும் ஜெவும் ) நெருங்கிய நண்பர்கள் ,
அதே போல நெருங்கிய நட்புடன் இவர்கள் என்பதாலோ, சென்ற அடுத்த நாளே, சோ என்னால தனியா இருக்க முடியலை, போதும் அந்த பாலிடிக்ஸ், என்று சொல்லி அவரையும் அழைத்துக்கொண்டு விட்டாரோ என்னமோ?
அதே போல நெருங்கிய நட்புடன் இவர்கள் என்பதாலோ, சென்ற அடுத்த நாளே, சோ என்னால தனியா இருக்க முடியலை, போதும் அந்த பாலிடிக்ஸ், என்று சொல்லி அவரையும் அழைத்துக்கொண்டு விட்டாரோ என்னமோ?
செய்த ஒரே பெரும் தவறு? அந்த கும்பல்!!
சோ சாரே என்னிடம் சொல்லி வருந்திய நிகழ்வும் உண்டு. மற்றபடி இவரின் ஆளுமையை யாரால் குறை கூற முடியும்?
சில இடங்களில் , இப்படி தனி மனித உணர்வுகளுக்கும், தனி மனித உருவங்களுக்கும் மயங்கிக்கிடக்கும் மக்களுக்கு, இப்படிப்பட்ட ஒரு ஆளுமைதான் சிறந்தது.
இவர் இருக்கும் வரை இருந்த சட்டம் ஒழுங்கு திமுக ஆட்சியிலும் இல்லை. இவர் இருக்கும் வரை இவரை எதிர்க்கவே முடியவில்லை. இராமாயண வாலியை போல, எதிராளியின் பாதி பலம் இவர் பெற்றதற்கு காரணம், மக்கள் இவர் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அன்பு மட்டுமே.
ஆனால் அதை எங்கேயோ ஒரு இடத்தில் அவர் எதனால் இப்படி தவறாக செய்து, கெடுத்துக்கொண்டார் என்பது மட்டுமே இவர் வாழ்வில் புரியாத புதிர்.
இவர் மறைவு நாள் நெருங்கிய நேரத்தில், இவருக்கு ஒரு மகள் என்று ஒரு புரளி.. அந்த பெண் சரியாக பிறந்த தேதி கூட தெரியாதவராம். வருஷம் கூடவா தெரியாது. அந்த வருடம் இவர் எத்தனை ஆக்டிவா இருந்தார் என்பதை பாண்டே சொல்ல அதுக்கு பதிலே இல்லை..
எத்தனை கேவலமான உலகம் இது, இறந்தவர் மீது கூட வீண் பழி சொல்லும் ஒரு உலகம். இப்படி பேசுபவர்கள் எல்லாம் நிச்சயம் அரக்கனை விட கீழானவர்களே, இவர்கள் வாழ்வதால் தான் பூமி காய்கிறது..
இன்றைக்கும் இவரின் “அம்மா” உணவகம்,, எங்கு கிடைக்கும், கிட்டத்தட்ட 400 கிராம் சாம்பார் சாதம் வெறும் ஐந்து ரூபாய்க்கு.. சரியான திட்டம்.. எத்தனை ஏழைகளுக்கு இது ஒரு வரப்ப்ரசாதம்.
#ஈபிஎஸ்_ஒபிஎஸ் ஒரு வேண்டுகோள்.
தயவு செய்து நான் பெரியவனா அல்லது நீ பெரியவனா என்று அளந்து பார்க்கும் பணியை செய்யாமல், அப்படி செய்யத்தூண்டுபவர்களை அண்ட விடாமல், உங்கள் ஆட்சி கட்சியை தினகரன் அபகரிக்காமல் பார்த்துக்கொள்வது தான் நீங்கள் அவருக்கு செய்யும் மரியாதை..
அவர் இல்லை என்றால் அதிமுக இல்லை என்பது உண்மை, ஆனால் அவரின் பெயரை சொல்லியே நீங்கள் கட்சியை நடத்தும் அளவுக்கு சிறப்பாக செயல்பட வேண்டும்.
இவருடைய மறைவின் பதிமூன்றாம் நாள் அன்று சுபஸ்வீ செய்து, சென்ற வருடம் விஸ்ராந்தி இல்லத்தில் அனைத்து முதிய பெண்களுக்கு உணவளித்து இவருக்காக ப்ரார்த்தித்து கொண்டேன். இன்று வருஷாப்த்தியம், இவருக்கு திவசம் செய்யக் கூட யாரும் உண்மையாக இருக்க மாட்டார்கள் ,
ஒவ்வொருத்தரும் இவரின் பணத்துக்கும் பதவிக்கும் தானே பறக்கிறார்கள்?
எத்தனை வாழ்ந்து ஒடி ஆடி சம்பாதித்து கடைசியில் என்ன கிடைக்கீறது என்று பார்த்தால்?
ஆனால் நினைவுடன் வாழும் வரை இறைவன் இவரை ஒரு ராணி மாதிரியே வாழ வைத்தான் என்ற பெருமையுடன் போய் சேர்ந்தவர்.
ஆடல் பாடல் நடிப்பு படிப்பு நாட்டின் மீது பிடிப்பு மக்களின் உயிர் துடிப்பு என்று பல நிலைகளை கையடக்கம் செய்த ஜெயலலிதாவின் நினைவு நாளன்று , எந்த வகையிலும் அவரை சார்ந்திராமல் இருந்த ஓரு தூர வெளிச்சமாக அந்த நிலவுக்கு , இந்த தமிழ் மண்ணில் என்றும் நிலவிக்கொண்டிருக்கும் அந்த அருமை மனிதர்க்கு, இந்த எழுத்துக்களை சமர்ப்பிக்கீறேன்.
No comments:
Post a Comment