அரச மாளிகையில் கம்பருக்கு ஒரு விருந்து ஏற்பாடாகியிருக்கிறது. அவர் இயற்றி, சமீபத்தில் அரங்கேற்றிய இராமாவதாரம் எனும் ஒரு ஒப்பற்ற நூலுக்காகப் பரிசுகள் அளித்து மரியாதை செய்த மன்னன், புலவரை விருந்துக்கும் அழைத்திருந்தான். புலவருடன் புலவர் மகனும் வந்திருந்தான்! நியாயம் தானே?
தலைவாழை இலைகள் போடப்பட்டு, ஆசனங்களில் அனைவரும் அமர்ந்திருந்தனர். சம்பிரதாயப்படி, உப்பு, ஊறுகாய், பச்சடி, பொரியல் என முதலில் பணிப்பெண்கள் பரிமாறிவிட்டுப் போக, விருந்தின் முக்கியமான இனிப்பான பாயசத்தினைப் பரிமாற அதனைப் பொற்கிண்ணத்தில் ஏந்தி வந்தாள்அரசகுமாரி அமராவதி! அவளே ஒரு கவிதை! அரசன் குலோத்துங்கன் மாளிகையில் வளரும் அழகு தேவதை!
பதினாறு வயதுப் பருவ மங்கை- அவள் நடந்தால் பாதங்கள் நோகுமே எனப் பாதசரங்கள் புலம்ப, அன்னநடை நடந்து, பாயச வட்டிலை ஏந்தியதால், அதன் கனத்தில் கொடியிடை அசைந்தாட ஒரு மின்னல் போல வந்தாள் அவள் – அமராவதி. அழகான இளைஞன் ஒருவனை எதிர்பாராத விதத்தில் அரசவைப் புலவரருகே கண்டதால் அமராவதிக்கு நாணத்தில் நடை தடுமாறிக் கால்கள் பின்னின.
ஆச்சரியத்தில், கண்கள் தாமரை இதழ்களென விரிய,அம்பிகாபதி மலைத்தான். கணப்பொழுதில் பார்வைகள் சந்தித்து மீண்டன. இதயங்கள் இடம் மாறின!
இளங்கவிஞன் இளவரசியைக் கண்டதும் கொண்ட காதலும் கற்பனையும் – அல்ல அல்ல, கண்ணெதிரே காணும் காட்சியின் அழகும் இனிமையும்- உள்ளத்திலிருந்து கவிதையை ஊற்றாகப் பெருக்கி நின்றன.
பாடல் பிறக்கின்றது:
பாடல் பிறக்கின்றது:
‘இட்ட அடி நோக
எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய………’
எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய………’
ஆஹா…. திடுக்குற்று அனைவரும் உண்பதை நிறுத்தி விட்டு அம்பிகாபதியை நோக்குகின்றனரே! கம்பருக்குப் புரிந்தது. பஞ்சும் நெருப்பும் அருகருகே அன்றோ நெருங்குகின்றன? காதல்தீ பற்றிக் கொள்ளாது என் செய்யும்? ஆனால், மன்னன் மகளிடம், கவிஞன் மகன் காதல் கொள்ளலாகுமா? உலகம் இதனை ஒப்புக் கொள்ளுமா? மன்னனின் விழிகளில் சினம் பொங்குவதைக் காண்கிறார்.
கம்பர் சமயோசிதமாக அம்பிகாபதியை நோக்கி என்னப்பா இத்தருணத்தில் கிழங்கு விற்கும் பெண்ணைப் பற்றிய பாடல்?” என்கிறார் .
“கம்பரே! நீரும் உம் மகனும் விளையாடுகின்றீர்களோ? அமராவதியைக் கண்டு காதல் கவிதை புனைய ஆரம்பித்தான் உம் மகன். நீர் அதனை இல்லை என்கிறீரோ?” என்ற குலோத்துங்கன், “கவிதையின் அடுத்த அடிகள் என்னவோ?” என்றான் ஏளனமாக.
கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் எந்தை வழங்கோசை
வையம் பெறும்.’
வையம் பெறும்.’
என்று பாடி முடித்து வைத்தார் கம்பர். அப்போதைக்கு ஒன்றும் கூறவில்லையாயினும் அரசனுக்கு சந்தேகம் வந்து அம்பிகாபதி மார்பில் சந்தனம் பூசவைத்து அரசகுமாரியிடம் சென்று முத்துச்சுண்ணம் பெற்றுவரச்சொன்னான். அம்பிகாபதி திரும்பிவந்தபோது மார்பில் அரசகுமாரி தழுவிய அடையாளமிருப்பதைக் கண்டான்
அரசன் அம்பிகாபதியை தண்டிக்கப் போகும்போது கம்பன் காலில் விழுந்து மன்றாடவே அரசன் சிற்றின்பம் தவிர்த்து நூறுபாடல்களைப் பாடினால் விடுதலை செய்கிறேன் என்றான். அம்பிகாபதி நூறு பாடல்களைப் பாடினான். ஆனால் காப்புப்பாடல் நூறுக்குள் வராது. அதையும் சேர்த்து எண்ணியமையால் நூறுபாடல் ஆகிவிட்டது என்று நினைத்து நூறாவதுபாடலை சோழ இளவரசி அமராவதி மீதுபாடிவிட்டான். ஆகவே அவனைக்கொல்ல சோழமன்னன் ஆணையிட்டான்.
இளம் இதயங்கள் காதலில் சங்கமித்து விட்டதைக் கம்பரும் உணர்ந்து செய்வதறியாது திகைத்தார்.
◆◆◆
# படித்தது
No comments:
Post a Comment