#சென்னை, கொளத்தூரில் நகைக்கடை கொள்ளை தொடர்பாக சென்ராம், சங்கர்லால் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். வழக்கில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம் மற்றும் தினேஷ் சௌத்ரியை கைது செய்ய 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜெய்பூர்அருகே பாலி மாவட்டத்தில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் குற்றவாளிகள் பதுங்கியிருந்தனர்அவர்களை பிடிக்க முயன்றபோது கொள்ளையர்களுக்கும், காவல்துறையினருக்குமிடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த தாக்குதலில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி வீரமரணம் அடைந்தார். மேலும், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனி சேகர் காயமடைந்தார்
பெரியபாண்டி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது சொந்த ஊரான சாலைபுதூர் கிராம மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் பொியபாண்டி தனது சொந்த நிலத்தை பள்ளிக்கூடம் ஒன்றிற்கு தானமாக வழங்கியவராம்.

பொியபாண்டி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா தேவர்குளம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சாலைபுதூரைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் பெயர் செல்வராஜ். 1969-ம் ஆண்டு பிறந்த இவர் பி.எஸ்.சி. படித்துள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு இவர் காவல் துறையில் பணியில் சேர்ந்தார். கடந்த 2014-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார்.
கடந்த அக்டோபர் மாதம் தான் இவர் மதுரவாயல் போலீஸ் நிலையத்திற்கு மாற்றலாகி வந்து பொறுப்பேற்றார். 2 மாதத்திற்குள் நகைக்கடை கொள்ளை விசாரணை அவருக்கு எமனாக மாறி விட்டது. ஆவடி வசந்த் நகரில் உள்ள நேரு தெருவில் வசித்து வந்த அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார்.

No comments:
Post a Comment