Wednesday, December 13, 2017

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் !!!

ஆள் வளந்த அளவுக்கு இன்னும் அறிவு வளரவில்லை என்று இந்த சொல்லை நாம் நமது ஊர்களில் வசிப்பிடங்களில் பெரியோர்கள் பிறருக்கு புத்திமதி சொல்லும்போது காதில் கேட்டிருப்போம். அதாவது சாதாரணமாக சில காரியங்களை செய்யும்போது யோசிக்காமல் தவறுதலாக செய்து விடுவது அல்லது ஒரு செயலின் பின் விளைவுகளை நினைத்துப் பார்க்காமல் செய்துவிட்டு பிறகு வருத்தப்படுவது இதுபோன்ற அறிவைப் பயன்படுத்தாமல் செய்யும் தவறுகளை செய்பவர்களிடத்தில் தான் பெரும்பாலும் இந்த வார்த்தையை உபயோகிப்பார்கள்.
இவ்வுலக வாழ்க்கைக்கு பலவிதத்திலும் அறிவை வளர்த்துக் கொள்வது மிகமிக அவசியமாக இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்வதால் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அல்லது ஒரு திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டுமென்றாலும் அறிவு அவசியப்படுகிறது அறிவோடு யோசித்து செய்யும் காரியங்கள் யாவும் திறம்பட உறுதியாகவும் நிலையானதாகவும் இருக்கும்.
இதற்க்கு உதாரணமாக சொல்லப் போனால் சில இளைஞர்கள் படிப்பில் முதல் மாணவனாக திகழ்ந்து பெரிய படிப்பெல்லாம் படித்து பட்டம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் படிக்காத ஒருவர் அவருக்கு அறிவுரை வழங்குவார். இப்படி நடக்கணும் இப்படிச் செய்யணும் என்ன தம்பி நீங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்க ஆளும் நல்லா வாட்ட சாட்டமா வளர்ந்திருக்கீங்க. ஆனால் ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு வளரலையே தம்பி என்று சொல்வார்கள். இந்த இடத்தில் அறிவுதான் முதலிடம் பெறுகிறது.
அது மட்டுமல்ல சில பிரச்சனைகளும் சில காரியங்களும் அறிவைச் சார்ந்து யோசித்துதான் சுமூகத் தீர்வு காணப்படுகிறது. நாம் நமது வாழ்விலும் அறிவோடு செயல்படாத எத்தனையோ பல விஷயங்களில் தோல்வியை சந்தித்து அனுபவப்பட்டு இருப்போம். பிறகு உணர்ந்து அறிவோடு செயல்பட்டு வெற்றி கண்டிருப்போம்.
எந்த ஒரு காரியமும் அறிவோடு சிந்தித்து செய்வதால் அதில் பாதிப்போ தோல்வியோ பின்விளைவுகளோ ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பில்லை.அறிவோடு சேர்ந்து செயல்படும்போது எது நல்லது எது கேட்டது என்று தீர்க்கமாக தெரியமுடிகிறது. பிறகு நல்லமுடிவை நாம் தேர்ந்தெடுத்து பிரச்சனையில்லாமல் மகிழ்வுடன் வாழ வழிவகுக்கிறது.
அறிவோடு சிந்தித்து செயல்படும்போது எல்லா காரியங்களுக்கும் சுமூகதீர்வு கிடைப்பதுடன் நமது வாழ்க்கையை முன்னேற்றப் பாதையின்பக்கம் கொண்டு செல்ல பயனுள்ள ஒரு ஆயுதமாக பெரிதும் உதவியாக இருக்கிறது.
இப்படி பல வகையிலும் அறிவை பயன்படுத்தித் தான் இவ்வுலக வாழ்க்கையை வாழவேண்டி உள்ளது. எனவே ஒவ்வொரு விஷயங்களையும் அறிந்து கொள்ள அதில் தனது திறமையை வெளிப்படுத்த அறிவை தெளிவு படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி அறிவு தெளிவாகாமல் நாம் இருந்தோமேயானால் நாம் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு இல்லாதவனென்றும் மூளை வளர்ச்சி இல்லாதவனென்றும் சமூகமக்கள் மூளைக்கு மூளை பேசிக் கொண்டிருப்பார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...