“ஜெயலலிதா உடல்நிலை சீரியஸ் என சொல்லாதீர்கள் என்று நான்தான் சொன்னேன்” – அப்போலோ பிரதாப் ரெட்டி ஓப்பன் டாக் (Apollo Pradap Reddy Open Talk)
அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர் எங்களின்
அப்போலோ மருத்துவ மனைக்கு ஆபத்தான நிலையில்தான் கொண்டுவரப்பட்டார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் எனபதால் உண்மையை மறைத்து அறிக்கை வெளியிட்டோம் என அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்தார்.
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (சனிக்கிழமை) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதாப் ரெட்டியி டம் விசாரணை ஆணையம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது அவர் கூறியதாவது; ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டுவரப்படு ம்போது ஆபத்தான நிலையில்தான் இருந்தார். ஆனால் உண்மைகளை நாங்கள் வெளியிடவில்லை. காரணம், நான் அனைவருக்கும் அறிக்கை வெளியிடும்போதே குறிப்பிட்டுச் சொன்னேன் ‘ஜெயலலிதா உடல்நிலை சீரியஸ் என்று சொல்லாதீர்க ள்’ என்று.
ஜெயலலிதா அனைவராலும் நேசிக்கப்பட்டவர்; அனைவரது இதயத்திலும் வாழ்ந்தார் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் வெளியிடக்கூடாது என்று வலியுறுத்தினேன்.
ஆனாலும் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் காரணமாக அவர் குணமடைந்த வந்தார். அவரது உடல்நிலை தேறி வந்ததையும் ஒருசில பேட்டிகளி ல் நான் கூறியிருந்தேன். ஆனாலும், நோயின் தீவிரம் காரணமாக எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையத்திலிருந்து இதுவரை எந்த சம்மனும் வரவில்லை. மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்பற்றி எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment